Gaza under Attack: இஸ்ரேலுக்கு வலுக்கும் எதிர்ப்பு..  ஜோ பிடன் திடீர் எச்சரிக்கை!

Oct 16, 2023,10:08 AM IST

வாஷிங்டன்: காஸாவை இஸ்ரேல் நீண்ட காலம் ஆக்கிரமித்திருப்பது தவறாகி விடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் செல்லவும் ஜோ பிடன் திட்டமிட்டுள்ளார்.


இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் உக்கிரமாகி வருகிறது. காஸாவை மட்டுமல்லாமல் மொத்த பாலஸ்தீனத்தையும் அழித்தொழிக்கும் முடிவில் அது இருப்பதாக அஞ்சப்படுகிறது. அந்த அளவுக்கு அது வெறித்தனமான தாக்குதலை காஸா மீது நடத்தி வருகிறது. வடக்கு காஸா முழுமையாக சேதமடைந்து போய் விட்டது. அங்குள்ள அடிப்படைக் கட்டமைப்புகள், வீடுகள் என எல்லாமே நிர்மூலமாக்கப்பட்டு விட்டன. அதை மீட்டெடுக்க பல வருடங்களாகும்.




ஆயிரக்கணக்கானோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்னும் கட்டட இடிபாடுகளை எல்லாம் எடுத்தால் மேலும் பல ஆயிரம் பேரின் பிணங்கள் கிடக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்  மற்றும் காஸாவைக் கைப்பற்ற அது நினைக்கும் திட்டம் ஆகியவற்றுக்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துள்ளது.


இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பாலஸ்தீன மக்களுக்காக பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளரான அமெரிக்கா இதைப் பார்த்து சுதாரிக்க ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலுக்கு திடீரென அறிவுரை கூற ஆரம்பித்துள்ளது.


அமெரிக்க அதிபர் இஸ்ரேலுக்கு சில அறிவுறுத்தல்களை விட ஆரம்பித்துள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு நேரில் போய் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகுவையும் நேரில் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக அமெரிக்காவின் சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு அவர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பிடன் கூறியிருப்பதாவது:


போர் விதிகளை மீறாமல் இஸ்ரேல் நடந்து கொள்ளும் என்று நம்புகிறோம்.  அப்பாவி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உணவு, மருந்து, தண்ணீர் போன்றவை கிடைக்க வகை செய்ய வேண்டும்.  இஸ்ரேல் நீண்ட காலம் காஸாவை ஆக்கிரமித்திருக்க முடியாது. அது தவறாகப் போய் விடும். காஸாவை பாலஸ்தீன நிர்வாகமே கட்டுப்படுத்த வேண்டும். பாலஸ்தீன அரசின் கட்டுப்பாட்டிலேயே காஸா இருக்க வேண்டும்.


மாறாக, அதை  இஸ்ரேல் நீண்ட காலம் கட்டுப்படுத்த முயன்றால் அது மிகப் பெரிய தவறாகி விடும்.  என்னைப் பொறுத்தவரை பாலஸ்தீன மக்களுக்கு, காஸா மக்களுக்கு ஹமாஸ் நிச்சயம் பிரதிநிதியாக இருக்க முடியாது. அப்பாவி மக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட ஹமாஸ் காரணமாகி விட்டது. எனவே அது மக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது என்றார் பிடன்.


இதற்கிடையே, இஸ்ரேலுக்கு வருமாறு அதன் பிரதமர், பிடனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று பிடன் செல்வார் என்று தெரிகிறது. இருப்பினும் இதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தவில்லை. சர்ப்பிரைஸாக பிடனின் இஸ்ரேல் பயணம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்