சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக சொன்னாரா.. அது வதந்தி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை கட்சியின் அவைத் தலைவராக்க விஜய் விரும்புவதாகவும், இதுதொடர்பாக அவரிடம் பேசப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

செஞ்சி ராமச்சந்திரன் திமுக, மதிமுக என கட்சிகளில் இருந்து தற்போது அதிமுகவில் இருக்கிறார். ஆனால் ஆக்டிவான அரசியல் செயல்பாடுகளில் அவர் இல்லை. முன்னாள் மத்திய அமைச்சரான செஞ்சி ராமச்சந்திரன் மூத்த திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவர் ஆவார்.
இந்த நிலையில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் சேரப் போவதாக செய்திகள் வந்துள்ளதே என்று செய்தியாளர்கள் இன்று எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டனர். அப்போது அவர் பதிலளிக்கையில், யார் அவர் சொன்னாரா .. என் கிட்ட சொல்லலியே.. அதாவது அதிமுக என்பது ஒரு கடல். அவர் போல ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இது வலிமையான இயக்கம். 30 வருடம் ஆட்சியில் இருந்த கட்சி, பொன் விழா கண்ட கட்சி. சும்மா வேண்டும் என்றே ஊடகங்களில் வதந்தி கிளப்புகிறார்கள் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}