Jokes: அதை ஏன் நான் கால்ல விழறப்போ சொன்னீங்க.. ஜோலி முடிஞ்ச்!

Oct 27, 2023,05:59 PM IST

சென்னை: தீபாவளி வந்துருச்சு.. இனி அடுத்து என்ன.. பலகாரம் பிளஸ் டிரஸ் ஜோக்ஸ்தானே.. அதான் நாங்களே நல்லதா நாலை எடுத்துட்டு வந்து உங்களை ஹேப்பியாக்க  கிளம்பிட்டோம்.. படிங்க.. அப்புறம் மறக்கா.. நல்லா சிரிச்சுருங்க.. பாஸ்!

இப்ப வாங்க டைரக்டா ஜோஸ்ஸுக்குள்ள போய்ரலாம்

அதை ஏன் நான் கால்ல விழறப்போ சொன்னீங்க!



கணவர்: கடவுளே என் பிரச்சனையை உன் காலடியில் வைக்கிறேன்.
மனைவி: என்ன சொன்னீங்க!!!!
கணவன்: இல்ல பிரச்சனையை உன் காலடியில் வைக்கிறேன். நீயே இதில் இருந்து என்னை காப்பாத்துன்னு சொன்னேன்.
மனைவி: அதை ஏன் நான் கடவுள் காலை தொட்டு கும்பிடும்போது சொன்னீங்க
கணவன்: மனசுக்குள்ள தானே சொன்னேன்
மனைவி: மனசுக்குள்ள வேண்டுறேன்னு சொல்லி வெளியில கேட்கிற மாதிரி சத்தமா வேண்டிக்கிட்டீங்க 
கணவன்: ஐயோ ஜோலி முடிஞ்சுச்சு😳😳

--

அலோ.. அது நான் செஞ்ச மைசூர் பாகு



கணவன்: குளிக்கிறதுக்கு சோப்பு எடுத்து கொடு.
மனைவி: நான் கடைக்கு போகணும் நீங்களே எடுத்துக்கோங்க.
கணவன்: எங்க இருக்கு
மனைவி: செல்ஃபில இருக்கு பாருங்க.
கணவன்: என்னாடி இது இந்த சோப்பு கரையவும் மாட்டேங்குது. நுரையும் வர மாட்டேங்குது, ஆனா நெய் வாசனை மட்டும் வருது
மனைவி: அரை லிட்டர் நெய்ல செஞ்சது அப்படித்தான் இருக்கும்.
கணவன்: ஏண்டி, இவ்வளவு காஸ்ட்லியான சோப்ப வாங்குன 
மனைவி: ஹலோ .. அது சோப்பு இல்லை. நான் தீபாவளிக்கு செஞ்ச மைசூர் பாகு.
கணவன்:என்னாது 😲😲

--

அன்பு பெருசா கருணை பெரிசா டார்லிங்



மனைவி: தீபாவளிக்கு டிரஸ் எடுக்கணும் வாங்க கடைக்கு போகலாம்.
கணவன்: காலைல போனாலும் நைட்டு வரைக்கும் நீ அந்த கடையில தான் இருப்ப
மனைவி: அதுக்கு
கணவன்: நான் ஒரேதா நைட்டே வரேன் செலக்ட் பண்ணிட்டு கால் பண்ணு.
(பல மணி நேரம் கழிச்சு)
மனைவி: ஏங்க நான் செலக்ட் பண்ணிட்டேன். கடைக்கு வந்துருங்க
கணவன்: எவ்வளவாச்சு?
மனைவி: ஏங்க அன்பு பெருசா கருணை பெருசா
கணவன்: இப்ப எதுக்கு சம்பந்தமில்லாம  கேக்குற
மனைவி: சும்மா சொல்லுங்க
கணவன்: கருணை இருந்தால் தான் அன்பு இருக்கும்.
மனைவி: சேல்ஸ்மேன் பாவங்க அவர் எனக்காக எடுத்து போட்ட எல்லா சேலையையும் திருப்பி மடிக்கணுமாம் கஷ்டம்ல்ல. அதனால அவருக்கு  கருணை காட்டி எல்லா சேலையையும் நம்மளே பணம் கொடுத்து அள்ளிட்டு போயிடலாம் இல்லங்க.
கணவன்:😲😲😲

இரண்டிலுமே "மைசூர்" மட்டும்தான் இருக்கு!






சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்