"ஹாய் மாக்ஸி.. ஹாய் மினி.. அதைச் சொல்ல வந்தேன் அதுக்குள்ள"!!

Sep 11, 2023,01:54 PM IST
- மீனா

சென்னை: திங்கள்கிழமையும் அதுவுமா டல்லா இருக்கக் கூடாதுல்ல.. காலையிலேயே சடசடனன்னு வேலையைப் பார்த்துட்டு இருப்பீங்க எல்லோரும்..  அப்படியும் யாராச்சும் டல்லடிச்சா. இதோ இருக்கு கலகலன்னு சிரிக்க வைக்கிற மருந்து நம்ம கையில.. !

லன்ச் முடிச்சுட்டா.. ஜாலியா வந்து படிச்சு சிரிச்சுட்டு அடுத்த வேலையப் பாருங்க.. லன்ச்க்கு இன்னும் போகாதவங்களா இருந்தா.. இதை பார்த்து சிரிச்சுட்டு அப்புறமா சாப்பிடப் போங்க.

மொத்தத்துல.. எங்களுக்கு.. நீங்க சிரிச்சா போதும்!

நடு ரோட்டில் பிச்சை எடுக்க வேண்டியதுதான்!

மனைவி: என்னங்க எனக்கு இன்னைக்கு காலைல ஒரு நல்ல கனவு வந்துச்சு
கணவன்: அப்படி என்ன கனவு கண்ட?
மனைவி: எனக்கு நீங்க 100 பவுன் நகை 50 பட்டுப் புடவை அதை வைக்கிறதுக்கு ஒரு பீரோ கூட வாங்கி கொடுத்தீங்க தெரியுமா.
கணவன்: உனக்கு மட்டும் எப்படி தான் இப்படி எல்லாம் கனவு வருதோ தெரியல.
மனைவி: ஏங்க, எல்லா கனவுக்குமே ஒரு பலன் உண்டு என்று சொல்கிறார்களே . அப்போ இந்த  கனவுக்கு பலன் என்னவாக இருக்கும்.
கணவன்: வேறென்ன நடுரோட்டில் நான் பிச்சை எடுக்கிறது தான்.

ஹாய் மேக்ஸி.. ஹாய் மினி!



தங்கை: வாங்க அக்கா 
அக்கா: நல்லாருக்கியா .. உன் பையன்  எப்படி படிக்கிறான்.
தங்கை: பெரிய ஸ்கூல்ல படிக்கிறான். அவங்க ஸ்கூல்ல எல்லாம் இங்கிலீஷ்ல மட்டும் தான் பேசணுமாம் அப்படிப்பட்ட ஸ்கூல்ல தான் படிக்கிறான்.
அக்கா: அப்படியா?
தங்கை: ஆமாக்கா அதனால வீட்டுல நாங்களே தமிழ்ல பேசினாலும்  கூட அவன் இங்கிலீஷ்ல தான் பேசுவான்.
அக்கா: பரவாயில்லையே நல்ல ஸ்கூல்ல தான் சேர்த்து இருக்க. 
தங்கை: இதோ  வந்துட்டான் பாருங்க
மகன்: ஹாய் மம்
அம்மா: இதோ உன்னுடைய பெரியம்மாவும் , சித்தியும் வந்திருக்கிறாங்க பாரு அவங்கள வாங்கனு சொல்லு. அவங்க நீ இங்கிலீஷில் பேசுறதை கேட்க ஆவலா இருக்காங்க.
மகன்: "ஹாய் மேக்ஸி மம், ஹாய் மினி மம்".
அக்கா, தங்கை:??😲😲

அதைச் சொல்ல வந்தேன் அதுக்குள்ள!



தோழி 1: ஏன்டி இப்படி வீட்டை அலங்கோலமா போட்டு வச்சிருக்கிற?
தோழி 2: ஆமாடி ,நேத்து என் கணவர் வீட்டில் இருந்தாரு. அதனால வீடும் நீட்டா இருந்துச்சு. இன்னைக்கு அவரு வேலை விஷயமா வெளியூர் போயிட்டாரு அதனாலதான்.
தோழி 1: அப்போ உன் கணவர் வீட்டுல இருந்தா அவர் திட்டுவாரு என்று பயந்து  நீ வீட்டை சுத்தமா வெச்சிருப்ப. இப்ப அவர் இல்லாததுனால இப்படி போட்டு வச்சிருக்க அப்படித்தானே
தோழி 2: அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.  அவர் வீட்டில்  இருந்தார்னா  அவரே வீட்டை கூட்டிப் பெருக்கி நீட் ஆக்கி இருப்பாரு.., அதை சொல்ல வந்தேன் அதுக்குள்ள அவசரப்படுற!
தோழி 1: அடிப்பாவி!😲

அப்படின்னா தலைக்குள்ள இல்லையாம்மா!



மகள்: அம்மா எனக்கு வயிறு ரொம்ப வலிக்குது.
அம்மா: ஒழுங்க சாப்பாடுனு சொன்னா கேக்குறியா
மகள்: சாப்பிடலேன்னாலும் வயிறு வலிக்குமாம்மா.
அம்மா: ஆமா, வயித்துல ஒன்னும் இல்லைனா வயிறு வலிக்க தான் செய்யும்.
மகள்: அம்மா, அப்ப நேத்து உங்களுக்கு  தலை வலிக்குதுன்னு சொன்னீங்க. அப்போ உங்களுக்கும் இதனால் தானா?
அம்மா:😲😲

சமீபத்திய செய்திகள்

news

மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

news

100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

news

நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு

news

பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்