டில்லி : டில்லி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக 8 எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள விவகாரம் டில்லி அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
டில்லி சட்டசபைக்கு பிப்ரவரி 05ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் பாஜக, ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக டில்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம்ஆத்மியை அகற்ற பாஜக கடுமையாக போராடி வருகிறது. இதனால் மக்களை கவருவதற்காக பாஜக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசி உள்ளன.

டில்லி தேர்தலுக்கு பிறகு இந்த முறை யார் ஆட்சியை பிடிப்பார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் டில்லி சட்டசபையில் தற்போது எம்எல்ஏ.,க்களாக இருக்கும் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த பிஜ்வாசன், நரேஷ் யாதவ், பவன்குமார் சர்மா, பூபேந்தர் சிங் ஜூன் உள்ளிட்ட 8 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். சட்டசபை தேர்தலில் தங்களுக்கு போட்டியிட இந்த முறை கட்சி தலைமை வாய்ப்பு அளிக்காததால் தங்களின் எதிர்ப்பை காட்டுவதற்காக எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களில் சிலர் இரண்டு முறை தொடர்ந்து எம்எல்ஏ.வாக இருந்தவர்கள். இவர்களுக்கு ஏன் ஆம்ஆத்மி தலைமை சீட் தர மறுத்தது என்பது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்ததுடன் இவர்கள் கட்சியில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் 8 எம்எல்ஏ.,க்களின் இந்த செயல்பாடு ஆம்ஆத்மிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் மட்டுமல்ல கட்சி நிர்வாகிகளே ஆம்ஆத்மி தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும், இது இந்த முறை தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் சொல்லி துவங்கி உள்ளன. இதனால் அடுத்து என்ன செய்வது? இருக்கும் இந்த 4 நாட்களுக்கும் மக்களிடம் குறைந்துள்ள தங்களின் மதிப்பை எப்படி உயர்த்துவது என தெரியாமல் ஆம்ஆத்மி குழப்பத்தில் உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
Short Story: ஒரு பெரிய கெடா பூனை!
முகிலெனும் வெண் திரை விலக்கி.. விண்ணகப் பேரழகி!
மக்களே உஷார்...தமிழகத்தில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல்: ஒரே நாளில் 1320 பேர் பாதிப்பு
2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
{{comments.comment}}