"ஜஸ்டின் மனைவியை பிரிஞ்சுட்டாரா"... ஆதரவாளர்களால் நம்பவே முடியலை!

Aug 03, 2023,10:18 AM IST
ஒட்டோவா :  கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியோ தனது மனைவியை விட்டுப் பிரிந்ததை அவரது ஆதரவாளர்களால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு தனது மனைவி சோபி கிரகெரியை விவாகரத்து செய்ய போவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இது பெரும் ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளது. பலருக்கும் இது சர்ப்பிரைஸாக உள்ளது. காரணம், இருவரும் அப்படி ஒரு கணவன் மனைவியாக வலம் வந்தவர்கள். இருவரும் அவரவர் துறையில் முன்னேற ஒருவருக்கு ஒருவர் அத்தனை ஒத்துழைப்பு ஆதரவு கொடுத்து வந்தனர்.



கனடா பிரதமர் ஜஸ்டினுக்கும், அவரது மனைவிக்கும் 2005 ம் ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது இருவரும் சட்டப்படி பிரிய முடிவு செய்திருப்பதாக ஜஸ்டின் தனது இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்துள்ளார். 

மிக மிக சிம்பிளான ஒரு மனிதர்தான் ஜஸ்டின். கேஷுவலாக எல்லோரிடமும் பேசுவார். பந்தா காட்ட மாட்டார். வெகு இயல்பாக பேசுவார். குழந்தைகளைப் பார்த்து விட்டால் போதும், ஓடிப் போய் அவர்களுடன் அமர்ந்து பேசுவார். மடி மீது அமர வைத்துக் கொள்வார். தூக்கிக் கொஞ்சுவார். எந்தவிதமான ஈகோவையும் காட்ட மாட்டார். 



இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமானவரும் கூட. குறிப்பாக தமிழர்களின் மனம் கவர்ந்தவர் ஜஸ்டின். இந்தியாவில் நடைபெறும் சில சம்பவங்கள் குறித்து கருத்து கூறியவர். அதற்காக தயக்கம் காட்டாதவர். மக்களின் பிரதமராக வலம் வந்தவர் ஜஸ்டின். தற்போது பெர்சனல் வாழ்க்கையில் அவர் ஒரு இழப்பை சந்தித்துள்ளது நிச்சயம் அவரது வாழ்க்கையில் சற்று தொய்வை ஏற்படுத்தும் என்றே சொல்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

news

அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி

news

தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!

news

மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!

news

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

news

இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!

news

தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

news

மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

news

தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்