சென்னை: தினம் தினம் நடந்து வரும் நிகழ்வுகள், தலைவர்களின் பேட்டிகளால் தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க துவங்கி உள்ளது. கடந்த மாதம் வரை பாமக ஒரு பக்கம், விஜய் ஒரு பக்கம் என பரபரப்பாக பேசுபொருளாக மீடியாக்களில் இருந்து வந்தனர். ஆனால் இந்த மாதம் நிலைமையே மாறி விட்டது.
செப்டம்பர் மாதம் துவங்கியது முதலே அதிமுக மற்றும் அதிமுக-பாஜக கூட்டணிக்குள் பல மாற்றங்கள் நடந்து வருகிறது. மூப்பனார் நினைவு தின நிகழ்ச்சிக்கு பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் அறிவித்தனர். கூட்டணி பற்றி டிசம்பரில் சொல்வதாக தேமுதிக.,வும் சொல்லி விட்டது, அமமுக.,வும் சொல்லி விட்டது. கூட்டணியில் தான் இப்படி ஒரு குழப்பம் என்றால், திடீரென அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி தலைமைக்கு சவால் விடும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனால் தான் தாங்கள் கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்த டிடிவி தினகரன், நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, இபிஎஸ்.,ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது. அதனால் தான் கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். ஓபிஎஸ்.,ம் இதையே தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் செங்கோட்டையனை சந்திக்க உள்ளதாகவும், செங்கோட்டையன் - சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், டில்லி சென்று அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்ததாக தெரிவித்தார். அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக அவரிடம் பேசியதாக கூறினார். இதனால் அதிமுக ஒன்றிணைவது பற்றி, அமித்ஷாவிடம் எதற்காக பேச வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், தானும் அமித்ஷாவை சந்தித்ததாக அதிமுக முன்னாள் சபாநாயகர் தம்பிதுரையும் தெரிவித்துள்ளார். இதனால், அதிமுக.,விற்குள் என்ன தான் நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்யும் இடங்களில் அதிமுக.,வின் செல்வாக்கு அதிகரித்து வருவதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இது திமுக.,வை மட்டுமல்ல அரசியல் களத்தில் உள்ள பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதே நிலை தொடர்ந்தால் எளிதாக வெற்றி பெற்று, இபிஎஸ் முதல்வராகி விடுவார் என்பதால் அதை தடுப்பதற்காக கூட்டணியிலும், அதிமுக.,விற்குள்ளும் குழப்பங்கள் ஏற்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. அரசியல் வட்டாரங்களில் இது பற்றி விசாரித்த போது, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் இபிஎஸ் முதல்வராவதை விரும்பவில்லை என சொல்லப்படுகிறது.
ஆனால் இவர்களை சமாதானப்படுத்தி, கூட்டணியை பலப்படுத்த பாஜக முயற்சி வருகிறதாம். இருந்தாலும் கூட்டணியில் தொடர தாங்கள் தயாராக இருப்பதாகவும், அப்படி தொடர வேண்டும் என்றால் இபிஎஸ் தவிர வேறு யாரை வேண்டுமானாலும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பாஜக.,விடம் ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்கள் நிபந்தனை விதித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. வலுவான ஒரு கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருக்கும் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பிறகு எப்படி மாற்றுவது? அப்படியே மாற்றினாலும் வேறு யாரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது என பாஜக குழப்பத்தில் உள்ளதாம்.
இபிஎஸ்.,ஐ முதல்வர் வேட்பாளர் இடத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்பதை நோக்கி தான் எதிர்ப்பு குரல்கள் கட்சிக்குள்ளேயே எழுவதால், இதை பாஜக தலைமையும், அதிமுக தலைமையும் எப்படி கையாள போகிறது? இபிஎஸ்.,க்கு தான் இது நெருக்கடியை தருவதால், அவர் இந்த பிரச்சனையை எப்படி கையாண்டு, தேர்தலில் வெற்றி பெற போகிறார் என்பது தமிழக அரசியல் நிகழ்வுகளை இன்னும் சுவாரஸ்யமாக்கி உள்ளது.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}