சென்னை: காதலிக்க நேரமில்லை படம் பலரையும் கவர்ந்துள்ளது. நடிகர் ரவி மோகனுக்கு சூப்பரான கம் பேக் படமாகவும் இது பார்க்கப்படுகிறது. ஆனால் படத்தின் கதையில் எல்லோருக்கும் உடன்பாடு இருக்குமா என்றால் இல்லை என்ற பதிலைத்தான் சொல்ல வேண்டியுள்ளது.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம்தான் காதலிக்க நேரமில்லை. இதில் ரவி மோகன் கதாநாயகனாகவும் நித்யா மேனன் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.
ரவி, வினய், யோகி பாபு மூவரும் நண்பர்கள். இதில் வினய் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் நடிகர்கள் நடிக்கத் துணியாத பாத்திரம் அது. அதை தில்லாக ஏற்று நடித்துள்ளார் வினய். அதற்காகவே பாராட்டலாம். ஆனால் மலையாளத்தில் மம்முட்டி இந்த ரோலில் ஏற்கனவே நடித்து விட்டார் என்பதையும் இங்கு சொல்ல வேண்டியுள்ளது.
சரி படத்தின் கதை என்ன...?
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் காதலை, தங்களின் எதிர்கால வாழ்க்கையை தங்களுக்குப் பிடித்தது போல் எப்படி அமைத்துக் கொள்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறார் கிருத்திகா உதயநிதி. இதுதான் படத்தின் கதை. அத்தோடு ஆங்காங்கே பல்வேறு விஷயங்களையும் நிரவித் தெளித்து தனது திறமையை அழகாக நிரூபித்துள்ளார்.
நடிப்பு என்று பார்த்தால் கிட்டத்தட்ட எல்லோருமே சிறப்பாக நடித்துள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும். நித்தியா மேனன் நடிப்பு ராட்சசி என்று சொல்லலம். அத்தனை அழகாக, எதார்த்தமாக இருக்கிறது அவரது நடிப்பு. ரவி மோகனுக்கு இது ஒரு கம் பேக் படமாக அமையும் என்று நம்பலாம். வினய், யோகி பாபு என்று மற்றவர்களும் கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாகவும், அழகாகவும் நடித்துக் கொடுத்துள்ளனர்.
படம் எல்லோருக்கும் பிடிக்குமா என்றால் பதிலை யோசித்துதான் சொல்ல வேண்டியுள்ளது. இன்றைய டூ கே கிட்ஸ் படத்தை ஜஸ்ட் லைக் தட் ஆக எடுத்துக்கொண்டு நகர்வார்கள். ஆனால் 90ஸ் கிட்ஸுக்கு முந்தைய தலைமுறையினர், கண்டிப்பாக விமர்சனம் செய்யக்கூடிய படமாகத்தான் காதலிக்க நேரமில்லை வந்துள்ளது. இன்றைய காலகட்டத்திற்கு இது எதார்த்தம் என்றாலும் கூட, நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதே அவர்களின் தீர்ப்பாக இருக்கும்.
But ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும்.. கிருத்திகா உதயநிதி, ஒரு இயக்குநராக பல படி தன்னை மேம்படுத்திக் கொண்டு உயர்ந்து நிற்கிறார்... hats off to her!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}