சென்னை: வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஏதாவது ஜோக்குடன்தான் கடந்து செல்கிறோம்.. சிலருக்கு வாழ்க்கையே ஜோக்காகத்தான் இருக்கும்.. கஷ்டமா இருந்தாலும் நாலு கடி ஜோக்ஸை எடுத்து கடிச்சுட்டுப் போயிட்டோம்னா.. கஷ்டம் கூட மிரண்டு ஓடிரும் பாஸ்.
அதிலும் கல்யாணமானவர்களுக்கு வீட்டுல தினசரி ஏதாவது ஒரு "சம்பவம்" நடந்துட்டேதான் இருக்கும்.. பெரும்பாலான சம்பவங்கள் மிரட்சியா இருந்தாலும் கூட.. அதிலும் சில பல நகைச்சுவைகள் புதைந்து கிடக்கத்தான் செய்கிறது.. அதிலிருந்து உங்களுக்காக சில.. லன்ச்சுக்கு டைம் ஆயிருச்சு.. ஸோ, படிச்சுட்டுப் போய் சாப்பிட்டுட்டு வாங்க.. இல்லாட்டி சாப்பிட்டு வந்து ஜாலியா படிச்சுச் சிரிங்க.. அது உங்க சவுகரியம்!
காய்ச்சல் விட்டு விட்டு அடிக்குது டாக்டர்
பேஷன்ட்: டாக்டர் எனக்கு காய்ச்சல் விட்டு விட்டு அடிக்குது
டாக்டர்: விடாம அடிக்கிறதுக்கு அது என்ன உன் பொண்டாட்டியா.. விட்டு விட்டுத்தான் அடிக்கும்!
--
ஒன்னையே சமாளிக்க முடியலை!
என்னடா சொல்ற.. உன் மனைவியாலதான் நீ குடிக்கிறதையே விட்டியா
ஆமாடா.. குடிச்சா.. ரெண்டு ரெண்டா தெரியறா.. ஒன்னையே என்னால சமாளிக்க முடியல.. இதுல ரெண்டா வந்தா என்னாகுறது.. அதான் குடியை விட்டுட்டேன்!
--
கெட்ட பேரு வாங்கிட்டியே
ஒரே ஒரு வயிறுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பாப் போச்சு
ஏன்டா என்னாச்சு
இப்ப தொப்பைன்னு பேரு வாங்கிட்டு வந்து நிக்குது!
--
வீடே நாறிடுமேம்மா!
பூக்காரம்மா: சார் பூ வாங்கிட்டுப் போங்க சார்
அவர்: வீட்டுக்காரம்மா ஊருக்குப் போயிருக்கும்மா
பூக்காரம்மா: பரவாயில்ல.. சும்மா வாங்கிட்டுப் போய் வைங்க.. வீடே மணக்கும் சார்
அவர்: மணக்கும்தான்.. ஆனா வீட்டுக்காரம்மா ஊர்ல இருந்து வந்தப்புறம்.. பூ எப்படி வந்துச்சுன்னு கேட்டா.. வீடே நாறிடுமே!
--
என்ன கோபத்துல இருந்தாளோ!
அவன்: ஏண்ணே சோகமா இருக்கே.. என்னாச்சு
இவன்: பொண்டாட்டி அடிச்சுட்டாளேன்னு ஒரே ஒரு நாள் பேசாம இருந்துட்டேன்டா
அவன்: சரி அதுக்கு என்ன
இவன்: அவ என்ன கோபத்துல இருந்தாளோ தெரியலை.. நான் அடிச்சா பேசாம இருப்பியான்னு சொல்லி.. மறுபடியும் அடிக்க ஆரம்பிச்சுட்டாடா!
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திரியோதசியில் வரும்.. ஆவணி மாத பிரதோஷம்.. சிவனையும், நந்தியையும் வழிபட உகந்த நாள்!
மதிமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யா தற்காலிக நீக்கம்: வைகோ
46 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கமல்-ரஜினி?.. மாஸ் காட்டப் போகும் லோகேஷ் கனகராஜ்!
தொடர்ந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு குறைவு தெரியுமா
டில்லியில் 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெளிகுண்டு மிரட்டல்
பாஜகவின் புதிய செக்.. முதல்வர், அமைச்சர்கள் கைதானால் 30 நாளில் பதவி காலி.. புது மசோதா!
டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது திடீர் தாக்குதல்.. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரால் பரபரப்பு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஆகஸ்ட் 20, 2025... இன்று அதிர்ஷ்டம் கதவை தட்டும்
களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!
{{comments.comment}}