சென்னை: திருமணமானதுமே கதாநாயகிகளின் சினிமா வாழ்க்கை முடிந்துவிடும் என்கின்றனர். அதிர்ஷ்டவசமாக எனக்கு திருமணத்துக்கு பிறகும் பட வாய்ப்புகள் நன்றாக வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு கவுதம் கிச்சிலு என்பவருடன் திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு நீல் கிச்சிலு என்கிற ஆண் குழந்தை உள்ளது.
தற்போது இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் இப்படத்தில் திருமணத்துக்கு முன்னரே கமிட் ஆனார். பல்வேறு காரணங்களால் அதன் சூட்டிங் நடக்காமல் இருந்தது. இப்படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக காஜல் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், காஜல் அகர்வாலின் சமீபத்திய பேட்டியில், திருமணமானதுமே கதாநாயகிகளின் சினிமா வாழ்க்கை முடிந்துவிடும் என்கின்றனர். அதிர்ஷ்டவசமாக எனக்கு திருமணத்துக்கு பிறகும் பட வாய்ப்புகள் நன்றாக வருகின்றன. எனது சினிமா வாழ்க்கையில் திருமணத்துக்கு முன்பும், பின்பும் எந்த வித்தயாசமும் தெரியவில்லை. நான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் எனது குடும்பத்துக்காகவும் நேரத்தை ஒதுக்குகிறேன்.
இந்தியில் திருமணமான பிறகும் கதாநாயகிகளுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன. அவர்கள் பிசியாக நடித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தெலுங்கு சினிமாதுறையில் திருமணமான நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்க தயங்குகிறார்கள். தெலுங்கிலும் விரைவில் மாற்றம் வரும் என்று கூறியுள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}