சென்னை: கலைஞர் 100 விழா நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தற்போது பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாம்.
விழாவை சிறப்பிக்க பன்மொழிப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நாளை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவிற்கு கலைஞர் 100 என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கலைஞர் எழுதிய வசனம் மற்றும் பாடல்களில் இருந்து ஒரு சிறப்புக் கண்ணோட்டம், கருணாநிதி பற்றி இதுவரை அறியாத தகவல்கள் நிறைந்த ஆவணப் படங்கள் ஆகியவை மக்களுக்கு காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழா பிரம்மாண்டமான முறையில், மக்களை மகிழ்விக்க கூடிய சிறப்புக் நிகழ்ச்சிகளுடன் நடைபெறவுள்ளது. விழாவில் 50க்கும் மேற்பட்ட திரைப்பட இயக்குனர்கள், 20க்கும் மேற்பட்ட டான்ஸ் மாஸ்டர்கள் என ரிகர்சல் செய்து வருகின்றனர். இது மட்டும் அல்லாமல் கலைஞர் 100 விழாவில் 50க்கும் மேற்பட்ட டிஜிட்டல் திரைகள் கொண்ட 20 ஆயிரம் பேர் உட்கார்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனு்கு விழாவில் பங்கேற்க நேரில் போய் அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ,மலையாளம், ஹிந்தி உட்பட முன்னணி திரை பிரபலங்களும் அழைப்பு விடுக்கப்பட்டு இதில் கலந்து கொள்ள தயாராக உள்ளனர்.
நாளை சனிக்கிழமை சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் விழா நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க, மறுமலர்ச்சி தி.மு.க, மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டது.
இவர்கள் மட்டுமின்றி முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் வர வாய்ப்புள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வாரா?
கொடுமுடி கோவிலும்.. புராண வரலாறும், காவிரி ஆறும் அகத்தியரும்!
விஜய் நா வரேன், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு: தவெகவின் பிரசார லோகோ வெளியீடு!
வன்னியர் சங்கத்துக்கு பூட்டு.. ராமதாஸ் அன்புமணி - ஆதரவாளர்கள் இடையே மோதல்
அப்பனே விநாயகா.. இன்னிக்கு வடிவேலுவுக்குப் பொறந்த நாளு.. வயிறு குலுங்க சிரிக்க சிரிக்க வாழ்த்துங்க!
அதிரடியாக புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை... சவரனுக்கு 82,000த்தை நெருங்கியது!
சென்னை போத்தீஸ் ஜவுளி நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் திடீர் ஐடி ரெய்டு!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்.. தமிழ்நாட்டின் புதிய பெருமை
ஆதரவற்றோர் இல்லம், இலவச கல்வி.. சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ராகவா லாரன்ஸ்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 12, 2025... இன்று அன்பு பெருகும்
{{comments.comment}}