சென்னை: கல்கி 2898 கிபி படத்தில் பயன்படுத்தப்பட்ட புஜ்ஜி வாகனத்தை காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி ஓட்டிய வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருவதுடன் கல்கியும் காந்தாராவும் ஒன்றிணைந்த தருணம் என ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
முன்னணி நட்சத்திரங்கள் படம் என்றாலே நமக்கு ஆர்வம் அதிகரிக்கும். அதிலும் கல்கி 2898 ஏடி படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் பட்டாளமே நடித்து அசத்தி இருக்கிறார்கள் என்றால் சொல்லவா வேணும்.அதனால் தான் இப்படத்தின் வெளியீடுக்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள படம் கல்கி 2898 ஏடி. இதில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மேலும் இப்படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இது தவிர இப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியாகி மேலும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி விடுகின்றன.
இப்படம் வரும் ஜூன் 27ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது . இந்த கல்கி 2898 ஏடி படத்தில் எதிர்கால வாகனம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதாம். இந்த வாகனத்திற்கு புஜ்ஜி என பெயரிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த எதிர்கால புஜ்ஜி வாகனத்தை காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி ஓட்டியுள்ளார்.இந்த புஜ்ஜி வாகனத்தை ஓட்டும் வீடியோவை ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருவதுடன், ரசிகர்கள் அதனை கொண்டாடி மகிழ்ந்து ஷேர் செய்தும் வருகின்றனர்.
புஜ்ஜி வாகனத்தை ஓட்டும் வீடியோ கல்கி படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கல்கி திரைப்படம் குறித்து மிகப் பெரிய பேச்சு பொருளாக மாறி உள்ளது. இப்படத்தின் முன்னணி நடிகராக விளக்கும் பிரபாஸுக்கு ரிஷப் ஷெட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். முன்னதாக ஆனந்த் மகேந்திராவும் புஜ்ஜி வாகனத்தை ஓட்டினார் என்பது நினைவிருக்கலாம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}