சென்னை: பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள கல்கி 2898 ஏ டி திரைப்படத்தின் முன்னோட்டம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது. படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், குறுகிய காலத்திற்குள் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் கவர்ந்து சாதனை படைத்து வருகிறது.
குறிப்பாக கமல்ஹாசன் தோன்றும் அந்தக் கடைசி நேரக் காட்சி ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரமாண்டமான செட்டு மற்றும் கச்சிதமான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகி இருக்கும் கல்கி 2898 ஏடி திரைப்படத்தில் அமிதாப்பச்சன்,பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டிஜோர்ட்டஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
ஃபேண்டஸி சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவான இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சி அஸ்வினி தத், பிரியங்கா தத், ஸ்வப்னா தத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவர தயாராக உள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் இப்பட வெளியீட்டிற்கு எதிர்பார்த்து காத்து இருக்கும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கல்கி 28 98 ஏடி படத்தின் முன்னோட்ட வெளியீடு விழா சென்னையில் உள்ள பிஆர்பி சத்தியம் திரையரங்கு வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் இப்பட தயாரிப்பாளர் அஸ்வின் கலந்துகொண்டு கல்கி 2898 ஏடி படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.இது குறித்து அவர் கூறுகையில்,
இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையிலும் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை வித்தியாசமாக வழங்குவதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை கண்டு ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இப்படத்தின் முன்னோட்டத்தில்,இந்த உலகத்தின் முதல் நகரம் என்றும் கடைசி நகரம் என்றும் காசி குறிப்பிடப்படுவது... குடிநீர் பிரச்சனை.. உலகத்தின் ஒரே கடவுளாக சுப்ரீம் யஸ்கின்... 6000 வருடத்திற்கு பிறகு ஒளிரும் சக்தி... அதைக் காக்க போராடும் அஸ்வத்தாமா.. சிருஷ்டியின் ஜனனம்... இதை தடுக்க நினைக்கும் கும்பல் ... புஜ்ஜி என்ற வாகனத்துடன் அவர்களுடன் இணையும் பைரவா.. இருவருக்கும் இடையே நடைபெறும் போர்... பிறக்காத உயிருக்காக ஏன் இந்த இத்தனை அழிவு என எழுப்பப்படும் வினா... புதிய பிரபஞ்சம் உருவாகவிருக்கிறது என்ற முத்தாய்ப்பான வசனத்துடன் முன்னோட்டம் நிறைவடைகிறது.
பிரபாஸின் ஸ்டைலான தோற்றமும், ஆக்சன் பாணியில் வசனங்களும், கமல்ஹாசன் மற்றும் அமிதாப்பச்சன் நடிப்பை திரையில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி சில மணி நேரத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது. இது தவிர ரசிகர்கள் ட்ரெய்லரில் கமல் கெட்டப்பை, ரசித்து பகிர்ந்தும் வருகின்றனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}