சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 22 பேரும், சேலத்தில் 8 பேரும், புதுச்சேரியில் மூன்று பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் என மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதில் சம்பந்தப்பட்ட மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது போன்ற குற்றங்களை தடுக்க தவறிய மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய ஆட்சியாளர்களை நியமித்துள்ளது தமிழக அரசு.இதனால் இந்த வழக்கு தற்போது சிபிசிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, நேற்று அமைச்சர்கள் ஏ.வா வேலு,பொன்முடி ஆகியோர் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதில் அமைச்சர்கள் ஏ.வா வேலு, பொன்முடி, டிஜிபி உளவுத்துறை ஆகியோர் பங்கேற்க உள்ளனர். முன்னதாக கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இன்று சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}