பிக் பாஸ் தமிழ் 7..  ஆஹா.. புரோமோவே வேற லெவல்ல இருக்கே!

Aug 19, 2023,10:04 AM IST
சென்னை: கமல்ஹாசனின் அட்டகாசமான தோற்றத்துடன் கூடிய பிக் பாஸ் தமிழ் 7வது சீசன் குறித்த புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்றாகும். இது கிட்டத்தட்ட ஸ்டேஜ்ட் ஒன்றுதான் என்றாலும் கூட மக்களுக்கு நல்லதொரு பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய நாடகம் போலத்தான் இருக்கிறது. இதனால் இதைப் பார்க்க மக்களிடையே அதிக ஆர்வமும் உண்டு.

முதல் 6 சீசன்களை வெற்றிகரமாக முடித்து விட்ட விஜய் டிவி தற்போது 7வது சீசனைத் தொடங்க ரெடியாகி விட்டது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். இதுதொடர்பான செய்திகள் சமீப காலமாகவே அடிபட்டு வந்தது .யாரெல்லாம் இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்குள் வரப் போகிறார் என்பது குறித்த யூகங்களும் கொடி கட்டிப் பறந்து வந்தன.

இந்த நிலையில் தற்போது புரோமோ வெளியாகியுள்ளது. கடலுக்கு நடுவே ஒரு நீண்ட பாலம்.. அந்தப் பாலத்தின் நுனியில் கமல்ஹாசன் நிற்கிறார்.. கேமரா அவரை ஜூம் செய்து அருகே போகும்போது, கையில் உள்ள கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்படியே, திரும்பிப் பார்த்து தனக்கே உரிய புன்னகையுடன் இரு விரல்களை தனது கண்களை நோக்கி வைத்து பின் நம்மை நோக்கிக் காண்பிக்கிறார்.

வேற லெவலில் இருக்கிறது புரோமோ.. இப்பவே வெறியாகுதே.. இனி புரோகிராம் ஆரம்பிச்சு, வீட்டுக்குள் சண்டை களை கட்டும்போது வேற ரகமா  இருக்குமே என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் மிதக்க ஆரம்பித்து விட்டன.

சீக்கிரம் வாங்க பிக் பாஸ்!

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு

news

சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா

news

பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

news

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?

news

வெந்தயக் களி

news

கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!

news

உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

news

4 மணிக்கு எழுவது எப்படி? அற்புத பலன்களை கொடுக்கும் அதிகாலை.. எளிதாக்கும் சிறந்த டிப்ஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்