கோயம்புத்தூர்: நாடாளுமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் தொண்டர்கள் தடபுடலான வரவேற்பு அளித்தனர். உற்சாகமாக காட்சி அளித்த கமல்ஹாசன் பின்னர் நட்சத்திர ஹோட்டலில் நடந்த நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
வருகிற லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் கோவை அல்லது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.
கமல்ஹாசனுக்கு தேர்தல் களம் புதிதல்ல.. அதிலும் கோவையும் நல்ல பரிச்சயம் உண்டு. கடந்த சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் அவர் போட்டியிட்டார். பாஜகவின் வானதி சீனிவாசனிடம் மயிரிழையில் வெற்றியை நழுவ விட்டார். சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளையும் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்த நிலையில் சமீப காலமாக திமுகவுடன் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வருகிறார் கமல்ஹாசன். முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் நெருங்கிச் செயல்பட்டு வருகிறார். எனவே வருகிற லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்து செயல்படும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி நடக்குமானால் கோவை அல்லது ராமநாதபுரத்தில் கமல்ஹாசன் போட்டியிடலாம். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்தான் அவரது சொந்த ஊரான பரமக்குடி வருகிறது. கோவையில் கமல்ஹாசனுக்கு தொண்டர் பலம் ஜாஸ்தி. இந்த இரண்டில் ஒரு தொகுதியில் அவர் போட்டியிடக் கூடும். இப்போதைக்கு கோவை தொகுதியில் அவர் போட்டியிடவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். இதுகுறித்துத்தான் இன்று முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.
அகமதாபாத்தில் விமான விபத்து... விடுதி சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் 5 பேர் பலி?
அகமதாபாத் விமான விபத்து.. குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
அகமதாபாத்தில் விமான விபத்து...133 பேர் பலி... பயணிகளில் 169 பேர் இந்தியர்கள்.. ஏர் இந்தியா தகவல்!
விமான விபத்தில் சிக்கிய.. முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி எப்படி இருக்கிறார்?
அகமதாபாத்தில் பரபரப்பு.. ஏர்இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.. 200 பயணிகளின் நிலை என்ன?
காவல்துறை தரம்தாழ்ந்துவிட்டது... இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா?: சீமான்!
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு… 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம்
என்னை குலசாமி என சொல்லிக்கொண்டே நெஞ்சில் குத்துகிறார்கள்: டாக்டர் ராமதாஸ் வேதனை பேச்சு!
Trump Card: 50 லட்சம் டாலர் கொடுத்தால் கோல்ட் கார்டு.. அதிரடி திட்டத்தை இறக்கிய டிரம்ப்!
{{comments.comment}}