சென்னை: ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி கிடைத்துள்ளது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து எம்.பி பதவி மீண்டும் கிடைத்துள்ளது. இதை காங்கிரஸார் நேற்றிலிருந்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், இன்று லோக்சபாவில் ராகுல் காந்தி தனது அனல் உரையை ஆற்றவுள்ளார்.
இந்தப் பின்னணியில் ராகுல் காந்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நீதியை பலி கொடுத்து விட்டு பெரும் அதிகாரம் நீடிக்காது. உண்மையும், நேர்மையும் இருந்தால்தான் அங்கு நீதி தழைத்திருக்கும். மக்கள் உரிய முறையில் குரல் எழுப்பும்போது, உரிமையை வலியுறுத்தும்போதும்தான் உண்மை உயிரோடு இருக்கும்.
ராகுல் காந்தி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அதைத்தான் செய்திருக்கிறது. உரிய நேரத்தில் உரியதை அது செய்துள்ளது.
நமது பலத்தை காட்ட மட்டுமே அதிகாரத்தை கையில் எடுத்தால், சாமானியனும் கூடகொதித்தெழுவான், பொங்கி எழுவான். இதை அதிகாரத்திலும், அதிகார பலத்தில் மிதப்போரும் மனதில் கொள்ள வேண்டும். எந்த வகையிலானது நீதி வெல்லும், வென்றே தீரும்.
நாடு முழுக்க சாமானிய மக்களின் கோபம் அதிகரிப்பதை உச்சநீதிமன்றம் உணர்ந்திருக்கிறது.. அதனால் தான் அது நீதியை நிலைநாட்டியுள்ளது என்று கூறியுள்ளார் கமல்ஹாசன்.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் மாபெரும் ஹைக்கூ திருவிழா
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
வெந்தயக் களி
கண்விழித்தால் கண்ணன் கற்கண்டாகிறான்!
உருளிப் பாத்திரத்தில் பூ வைப்பதால் என்னெல்லாம் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
{{comments.comment}}