கோயம்புத்தூர்: சாப்பிடுற பிஸ்கட்டுக்கு 18 % GST, கோல்டு பிஸ்கட்டுக்கு 3 % GST விதிக்கிறார்கள். உள்ளூர் பணக்காரனை உலக பணக்காரன் ஆக்குவது பெரிதா? அல்லது கடைநிலை ஏழைக்கு கல்வி கொடுப்பது பெரிதா? என்று ஆவேசமாக கேட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம் பெற்ள்ளது. ஆனால் தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. கமல்ஹாசன் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்துள்ளார். கோவையில், திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பேசி தனது பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார் கமல்ஹாசன்.
அப்போது கமல்ஹாசன் பேசுகையில், கவுன்சிலராகவும் மேயராகவும் பணியாற்றி அனுபவம் கொண்டவர் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார். இந்தியாவில் மக்கள் தொகை 43 சதவீதம் பெண்கள் பணிக்கு செல்கின்றனர். வட மாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் தொழிலாளர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் உண்மை நிலை என்ன என்பது தெரியவரும்.

நாம் உட்கொள்ளும் பிஸ்கட் உணவு பொருளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி, ஆனால் தங்க பிஸ்கட்டுக்கு வெறும் 3 சதவீதம் தான் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. பாஜக கோவை தொகுதியில் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் விமான நிலையம் மேம்பாடு உள்ளிட்ட பல அறிவிப்புகள் உள்ளன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. நாளை நமதாக வேண்டும் என்றால் இன்று நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் இல்லையெனில் அடுத்த முறை தேர்தல் நடக்குமா? என்பதும் சந்தேகமே
இந்தியாவில் 97 கோடி பேர் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டியாக தமிழர்கள் திகழ வேண்டும். சிறு பிழை செய்தால் கூட அதை சரி செய்ய நூற்றாண்டு காலம் கூட ஆகலாம். தற்போது நடைபெற இருக்கும் தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போர். ஜூன் 4ம் தேதி மக்கள் கொண்டாடும் நாளாக இருக்க வேண்டும் என்றால் மக்கள் நல்ல முடிவு எடுக்க வேண்டும். செங்கோல் என்பது உங்கள் விரல் தான். காந்தி, காமராஜர், கலைஞர் வரை பல தலைவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பி பார்க்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
எங்கெங்கும் ஜில் ஜில் மழை.. பிரச்சினைகளும் கூடவே களை கட்டுது.. எப்படி சமாளிக்கலாம்??
திண்ணையில் இல்லை நண்பா... பல நாட்கள் ரோட்டில் இருந்தவன் நான்: நடிகர் சூரியின் நச் பதில்!
மேலும் பல அற்புதமான படங்களைத் தர வேண்டும்.. மாரி செல்வராஜுக்கு அண்ணாமலை பாராட்டு
ரூ.78,000 கோடி சாலை நிதி எங்கே?..மலைக்கிராமங்களுக்கு உடனடியாக சாலை, பாலம் அமைக்க வேண்டும்: அண்ணாமலை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
{{comments.comment}}