கள்ளக்குறிச்சி: குடிக்கும் பழக்கம் உடையவர்கள் அளவை மீறிப் போனதால்தான் கள்ளக்குறிச்சியில் இவ்வளவு பெரிய துயரம் நடந்து விட்டது. மக்கள் இனியாவது கவனம் இருக்க வேண்டும். கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் நலனைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அரசும் மாவட்டந்தோறும் மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் பலியான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி விட்டது. பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலம் விசாரித்துள்ளனர். பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணையில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கள்ளச்சாராயத்தைக் குடித்து இத்தனை பேர் பலியானது வருத்தம் அளிக்கிறது. இவர்கள் மீது அனுதாபப்படுகிறேன். ஆனால் இவர்கள் அளவை மீறி விட்டார்கள். கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். முதலில் அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எப்போதாவது குடித்தால் சரி, குடிப்பதில் அளவு இருக்க வேண்டும். அளவோடு இருந்தால் எதுவும் பிரச்சினை இல்லை. சர்க்கரை வியாதி வந்தால் எப்படி கட்டுக்குள் இருக்கிறோமோ அதுபோல இதையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அளவை மீறி நடந்து கொண்டால் அது துயரத்தில்தான் போய் முடியும். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
யாரையும் குடிக்காதீங்கன்னு சொல்ல முடியாது. அளவோடு குடிங்கன்னு, கவனமா இருங்க, உடல் நலத்தைப் பார்த்துக்கங்கன்னு சொல்ல முடியும். அரசு மன வள ஆலோசனை முகாம்களை தொடங்க வேண்டும். மறு வாழ்வு மையங்களை தொடங்க வேண்டும் என்றார் கமல்ஹாசன்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}