ஊழல் நடப்பதற்கு மக்களும்தான் காரணம்.. மக்கள் இல்லாமல் ஊழல் நடக்குமா.. கமல்ஹாசன் அதிரடி

Jun 25, 2024,04:30 PM IST

 சென்னை: ஊழல் நடப்பதற்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல, பொதுமக்களாகிய நாமும் தான் காரணம். நாம் இல்லாமல் எப்படி இந்த ஊழல்கள் நடக்கும் என்று இந்தியன் 2 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.


1996ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். அப்படத்தில், இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் கமலஹாசன் நடித்திருந்தார்.இப்படம் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.ஏ.எம் ரத்தினம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்தார். இவருடன் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.இந்தியன் படம் வெளிவந்து 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 




இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஷங்கர் இயக்கத்தில், இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. ரெட் ஜெயிண்ட் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து இந்தியன் 2 படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தியன் 2 திரைப்படம்  ஜூலை மாதம் 12ம் தேதி திரையங்குகளில் வெளியாக உள்ளது. இந்தியன் 2 படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


இந்த படத்தின் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மாலில் இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன், எஸ்ஜே சூர்யா, சித்தார்த், அனிருத், தம்பி ராமையா உள்ளிட்டோ் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது கமல்ஹாசன் பேசும்போது கூறியதாவது:


இந்தியன் இரண்டாம் பாகம் எடுப்பதற்கு கருவை இன்று கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி.  இந்தியன் தாத்தா இரண்டாம் வருகைக்கு மிகப்பெரிய அர்த்தமே இருக்கிறது. இந்தப் படம் ஐந்து வருடம் ஆறு வருடம் எடுத்ததற்கு காரணம் நடிகர்களோ தயாரிப்பாளர்களோ அல்ல. இயற்கை கோவிட்ல இருந்து விபத்துகளில் இருந்து பல விஷயங்களை இடையூறாக வந்து, அதிலிருந்து எல்லாம் எங்களை மீட்டு எடுத்து சுமந்து வந்த லைக்கா நிறுவனத்திற்கும், ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கும் என்றென்றும் இந்தியன் 2 நடிகர்கள் கடமைப்பட்டிருப்போம்.


வெற்றியை அனுபவிக்க வேண்டிய முதல் ஆட்களாக அவர்கள் தான் இருக்க வேண்டும் என்பதுதான் ஷங்கர் அவர்களுக்கும் எனக்கும் ஆசையாக இருக்கிறது என்று பேசினார்.


அதன் பின்னர்  செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்கும்போது, ஊழல் நடப்பதற்கு அரசியல் வாதிகள் மட்டும் காரணம் அல்ல, பொதுமக்களாகிய நாமும் தான் காரணம், நாம் இல்லாமல் இந்த ஊழல்கள் நடக்குமா? என கேள்வி எழுப்பினார் கமல்ஹாசன்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்