சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வருகிற 29ம் தேதி முதல் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இன்று கட்சியினர் மத்தியில் அவர் பேசும்போது மக்கள் நீதி மய்யம் கட்சி முழுமையாக திமுக வசம் போகவில்லை என்பதை சூசகமாக உணர்த்திப் பேசினார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் லோக்சபா தேர்தலில் கமல்ஹாசன் கட்சி போட்டியிடவில்லை. மாறாக ராஜ்யசபா தேர்தலில்தான் அவர்களுக்கு ஒரு சீட் தரப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் தீவிரப் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் ஈடுபடவுள்ளார்.
இந்த நிலையில் தனது கட்சியினருக்கான தேர்தல் வழிகாட்டும் கூட்டத்தில் கமல்ஹாசன் இன்று பங்கேற்றுப் பேசினார். அப்போது அவரது பேச்சு படு உற்சாகமாக இருந்தது. தொண்டர்கள் ரசித்துப் போய் கேட்டனர். கமல்ஹாசன் பேச்சிலிருந்து சில:
சாதியத்திற்கு எதிரானவன் நான். எனது தந்தை கடைசி வரை காங்கிரஸ்காரராக இருந்தவர். கதர் அணிந்து வலம் வந்தவர். அந்த வழி வந்த எனக்கு சந்தர்ப்பவாதம் பிடிக்காது. சந்தர்ப்பம் வேறு, வாதம் வேறு. நமது வாதத்தை சந்தரப்பத்துக்கு ஏற்ப மாற்ற முடியாது. அப்புறம் ரிமோட்டை எடுத்து எறிஞ்சீங்களே டிவியை உடைச்சீங்களேன்னு கேட்கலாம். அங்கதானே போறீங்கன்னும் கேட்கலாம்... இன்னும் ரிமோட் நம்ம கையில்தான் இருக்கு. டிவியும் அங்கேயேதான் இருக்கு. அது நம்ம ரிமோட், நம்ம டிவி. ஆனால், டிவிக்கான கரண்ட்டையும், பேட்டரியைும் உருவும் சக்தி உருவாகிக் கொண்டுள்ளது. இதுக்குப் பிறகு இதை நான் எறிந்தால் என்ன வச்சிருந்தால் என்ன.. அந்த மாதிரி செய்கைகளுக்கு அர்த்தமே இல்லாமல் போய் விடும்.
பிரதமருக்கு கொடுக்க வேண்டிய வணக்கத்தைக் கொடுப்பேன். அது அவருக்கான பணிவு அல்ல. மக்களின் நாயகம் இன்னும் இருக்கிறது என்பதற்காக தலை வணங்குவேனே தவிர தன்மானத்தை விட்டு தலை வணங்க மாட்டேன். 70 வருடமாக சொல்லிச் சொல்லி சாதியம் பேசாதீர்கள் என்று வளர்ந்தவர்களிடம், மறுபடியும் சாதி கற்றுக் கொடுக்கப் பார்க்கிறார்கள். அந்தத் திட்டத்தை வகுத்துத் தரும் கட்சியோ, திட்டமோ, யாராக இருந்தாலும் தகர்க்க வேண்டியது என் கடமை.
என்னைக் கேட்டார்கள்.. எதிரி யார் என்பதை முடிவு செய்த பிறகே வெற்றி நிச்யம். ஆனால் நீங்க மய்யம்னு சொல்றீங்களே என்றார்கள். அதான் சொல்லிட்டேனே. எனது எதிரி நான் முடிவு செய்து விட்டேனே. எப்போதும் சாதியம்தான் எனது எதிரி. நினைவு இருக்கும் வரை, நினைவு போகும் வரை அதுதான். சாதியம் போக வேண்டும் என்றால் சாதி வாரிக் கணக்கெடுப்பு ஏன் என்று கேட்பார்கள்.
இன்னும் யாரெல்லாம் விலங்கிடப்பட்டுள்ளனர் என்று தெரிய வேண்டும். எனவேதான் சாதி வாரி கணக்கெடுப்பு தேவை. முஸ்லீம்களுக்காக சாகவில்லை காந்தி. மதச்சார்பின்மைக்காக குண்டேந்தி இறந்தவர் அவர். எல்லா வீட்டிலும் பனழைய பொருட்கள் இருக்கும். போகி வரும்போது தெரியும் .. எது இருக்கும், எது போகும் என்று.
எனக்கு எந்த ஏரியாவெல்லாம் கிடைக்கும் என்று பயந்தார்களோ அங்கெல்லாம் நான் போகப் போறேன். இது தியாகம் அல்ல.. வியூகம். இது எனக்கு கிடைக்கும் மரியாதை அல்ல.. நமக்குக் கிடைக்கும் மரியாதை என்றார் கமல்ஹாசன்.
கமல்ஹாசனின் பிரச்சாரத் திட்டம்
மார்ச் 29ம் தேதி பிரச்சாரத்தைத் தொடங்கும் கமல்ஹாசனின் பிரச்சாரத் திட்டம் வருமாறு:
மார்ச் 29 ஈரோடு, 30ம் தேதி சேலம், ஏப்ரல் 2ம் தேதி திருச்சி, 3ம் தேதி சிதம்பரம், 6ம் தேதி ஸ்ரீபெரும்புதூர், 7ம் தேதி சென்னை, 10ம் தேதி மதுரை, 11ல் தூத்துக்குடி, 14ம் தேதி திருப்பூர், 15ம் தேதி கோவையில் பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசன் 16ம் தேதி பொள்ளாச்சியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}