அமரன் படம் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு.. கமல்ஹாசன் நன்றி!

Nov 01, 2024,01:13 PM IST

சென்னை:  அமரன் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி என அமரன் படத் தயாரிப்பாளர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.


நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாகவும், சாய்பல்லவி கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் அமரன். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று  900த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. 




மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் கேரக்டரை செய்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் சிறப்பு காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் படக்குழுவினர்களும்  பார்த்து மகிழ்ந்தனர். இந்நிலையில், அமரன் படத்தை பார்த்த முதமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.


அதில், நண்பர் கலைஞானி கமலஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன். புத்தகங்களை போல் திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரன் மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுபூர்வமாக படமாக்கியுள்ள இயக்குனர் ராஜ்குமார் கே.பி, மேஜர் முகுந்து வரதராஜன், இந்து வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களை தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய்பல்லவி மற்றும் அமரன் பட குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நாட்டை பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்கு நாம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் பிக் சல்யூட் என பதிவிட்டிருந்தார்.


இதனையடுத்து, தன்னுடைய அழைப்பை ஏற்று படத்தை கண்டு களித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த படத்தின் தயாரிப்பாளரும் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவருமான கமலஹாசன் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், எங்களது அழைப்பை ஏற்று அமரன் திரைப்படத்தை பார்த்து ரசித்ததோடு படத்தையும் அதில் பங்களிப்பாற்றிய கலைஞர்களையும் மனதார பாராட்டி முதல்வர் என் அன்பிற்கினிய நண்பர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் துணை முதல்வர் என் அன்பு இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி. முதல்வரின் பாராட்டு அமரனின் பெரும் வெற்றிக்கு அறிகுறி என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்