சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் படத்தை எதிர்பார்த்த தேதிக்கு முன்னதாக, அதாவது தியேட்டரில் படம் ரிலீசான ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் தக்லைஃப். ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் ஆகியன இணைந்து தயாரித்துள்ளன. சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஜூன் 05ம் தேதி கர்நாடக தவிர மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் நாடுகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது. பல விதமான சர்ச்சை, வழக்குகள் காரணமாக கர்நாடகாவில் மட்டும் தற்போது வரை இந்த படத்தை ரிலீஸ் செய்ய தடை உள்ளது.
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தக்லைஃப் படம், கலவையான விமர்சனங்களை பெற்றது. ரசிகர்களின் ஆதரவை பெற தவறவிட்டது. இந்த படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.149.7 கோடிக்கு வாங்கி இருந்தது. தியேட்டரில் படம் ரிலீசான 8 வாரங்கள் கழித்தே ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும் என கமல்ஹாசன் உறுதியாக அறிவித்திருந்தார். வழக்கமாக ஒரு படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட 28 நாட்களுக்கு பிறகு ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யலாம். ஆனால் தக்லைஃப் படத்தை 56 நாட்கள் கழித்து ஓடிடி.,யில் ரிலீஸ் செய்ய உள்ளதாக கமல் கூறி இருந்தார். அதன் அடிப்படையில் பார்த்தால் ஆகஸ்ட் 7 ம் தேதி ஓடிடி.,யில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது நிலைமையே வேறு. தியேட்டர்களில் ரசிகர்களின் ஆதரவையும் இந்த படம் பெறவில்லை. மற்றொரு புறம் சுப்ரீம் கோர்ட், கர்நாடகா ஐகோர்ட் என பலவற்றிலும் தக்லைஃப் படத்திற்கு எதிராக வழக்குகள் நடந்து வருகிறது. ஆனால் தமிழ்,தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் தான் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு நஷ்டம் வந்து விடக் கூடாது என்பதற்காக தியேட்டரில் படம் ரிலீசான ஒரு மாதத்திற்கு உள்ளாகவே ஓடிடி.,யில் ரிலீஸ் செய்து விடலாம் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே வழக்குகளின் முடிவு என்ன ஆகுமோ என்ற நிலையில் நெட்ஃபிளிக்சால் இப்படி ஒரு சோதனை தக்லைஃப் படத்திற்கு வந்துள்ளது.
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}