- ஸ்வர்ணலட்சுமி
"கல்வி வளர்ச்சி நாள்"- கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் என கலைஞர் 2006 ஆம் ஆண்டு அறிவித்து நடைமுறைப் படுத்தினார் .அதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் காமராசர் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அளித்த முக்கியத்துவத்தை நினைவு கூறும் வகையில், மாணவர்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வை வளர்க்கவும், மாணவர்களை கல்வி கற்க ஊக்கப்படுத்தவும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுகிறது.
கல்வி தந்தை பெருந்தலைவர் கல்விக்கண் திறந்தவர் என பல பாராட்டுதல்களுக்கு சொந்தக்காரர் காமராஜர். தமிழ்நாட்டில் முதல்வராக பதவி வகித்தது முதல் நாட்டின் பிரதமரை தேர்வு செய்யும் கிங்மேக்கர் ஆக மாறியது வரை ஏழை எளிய மக்களின் நலம், சமூகம் ,கல்வி மற்றும் பொருளாதாரத்துக்கு தன்னுடைய வாழ்க்கையில் இறுதி மூச்சு வரை திறம்பட பணியாற்றியவர் காமராஜர்.
கர்மவீரர் காமராசர் விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 -ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் நாள் பிறந்தார். அவருக்கு முதலில் காமாட்சி என்ற பெயரே பெற்றோர்கள் வைத்தனர் .பின்னர் அவரை "ராஜா" என செல்லமாக அழைக்க காமராஜர் என்று பெயரை பெற்றார்.
காமராஜரின் தந்தையின் மறைவுக்கு பின்னால் நிதி பிரச்சனை காரணமாக அவரால் கல்வியை தொடர முடியவில்லை .எனவே ஆறாம் வகுப்பு வரை பள்ளி படிப்பை பெற்றார். தமிழக அரசியல் வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுவது காமராஜர் தமிழ்நாட்டை முதலமைச்சராக ஆட்சி செய்த ஒன்பது ஆண்டு காலம்தான்.
தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக மதிய உணவு திட்டத்தை ஏற்படுத்தி ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தார் .அவருடைய உழைப்பால் தொண்டால் படிப்படியாக உயர்ந்த இவர்-" பெரும் தலைவர்", "படிக்காத மேதை", "கர்மவீரர் ","கல்விக்கண் திறந்த காமராஜர்", "தென்னாட்டு காந்தி" என பல சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்கு நல்லது செய்யும் அவருடைய தன்னலமற்ற தொண்டிற்காக இந்திய அரசு அவரின் மறைவிற்குப் பின்னர் 1976 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதினை வழங்கியது.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் கல்விக்கு முதல் இடத்தை வகுத்தார்." கல்வி சிறந்த தமிழ்நாடு" என்ற பாரதியின் வரியை உண்மையாக்க இரவும் பகலும் பாடுபட்டார் இவர். பெரும் தலைவர் காமராஜர்" மனிதருள் மாணிக்கம் ".இவர் சட்டங்கள் கற்றதில்லை, பட்டங்கள்
பெற்றதில்லை, ஆனால் திட்டங்கள் பல கோடி வகுத்திட்ட அறிவு பெட்டகம் காமராஜர்.
விடுதலைப் போராட்டம் முதல் சமூக நீதிப் போராட்டம் வரை தன்னலமில்லாத தலைவர்களை நம் தமிழ் மண் சந்தித்துள்ளது .அந்த வரிசையில் கர்மவீரர் காமராஜர் ஆட்சி செய்த காலகட்டத்தில் அவர் விதைத்த விதைகள் தான் இன்று நம் தமிழர்களை சர்வதேச அளவிற்கு உயர்த்தி வருகிறது. "கருப்பு காந்தி" என பெருமையுடன் அழைக்கப்படும் கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளான இன்று "கல்வி வளர்ச்சி நாளாக" நாம் அனைவரும் "கட்டாய கல்வி "என்ற உறுதிமொழி எடுத்து கொண்டாடி மகிழ்வோம். மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}