சென்னை: மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நிவாரண பணிகளை இன்று தொடங்கினா்.
மிச்சாங் புயல் உருவாகி சென்னையே புரட்டிப் போட்டு விட்டது. அதீத புயல் மழையால் சென்னை முழுவதும் மழை நீரால் தனித்தீவு ஆனது. மின்சாரம், அத்தியாவாசிய பொருள்கள், தொலைத்தொடர்பு , போன்றவை எதுவும் இல்லாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் உள்ள தண்ணீர் முழுவதும் வடிந்து வருவதற்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது சில பகுதிகளில் தண்ணீர் வடிந்து பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. ஒரு சில இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் இருகின்றது. மேலும் தேங்கும் மழை நீரால் சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர்.

கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் என்று பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இன்று காலை 8 மணி அளவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலிருந்து மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதை கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.
இதற்கிடையே, வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மக்களுக்கு உதவும் நேரம் இது. இதில் அரசியல் பேசக் கூடாது, செய்யக் கூடாது . அனைவரும் களம் இறங்கிச் செயலாற்ற வேண்டும் என்றும் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}