அ்.சீ.லாவண்யா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி டிசம்பர் 8ம் தேதி, கோவிலைச் சுற்றியுள்ள 149 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் டிசம்பர் 8ம் தேதி காலை மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
கும்பாபிஷேகம் காரணமாக, நகரம் முழுவதும் பண்டிகை உற்சாகம் மலர்ந்துள்ளது. இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் நகர்ப் பகுதியில் உள்ள 149 அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி இன்று உத்தரவு பிறப்பித்தார்.
.jpg)
லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை எளிதாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கும்பாபிஷேகத்தைக் கொண்டாட காஞ்சிபுரம் முழுவதும் சுத்திகரிப்பு, அலங்கார வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}