- ஸ்வர்ணலட்சுமி
சென்னை : முருகனுக்குரிய மிக முக்கியமான விரதம் சஷ்டி விரதமாகும். மாதந்தோறும் சஷ்டி திதி வந்தாலும் ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் சஷ்டியை மகா கந்தசஷ்டி என அழைப்பதுண்டு. இது அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை துவங்கி, சப்தமி வரை ஏழு நாட்கள் இருக்கும் விரதமாகும்.
சஷ்டி விரதம் என்பது யார் வேண்டுமானாலும், என்ன பிரச்சனை தீர வேண்டும் என்றாலும், எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றாலும் இருக்கலாம். இருந்தாலும் குழந்தை வரம் வேண்டுபவர்களே இந்த விரதத்தை அதிகமாக இருப்பதுண்டு. சஷ்டி விரதம் இருப்பதில் பல வகைகள் உண்டு. அவற்றுள் மிக கடுமையான விரதமாக கருதப்படுவது மிளகு விரதமாகும். அதாவது முதல் நாளில் 1 மிளகு, 2ம் நாளில் 2 மிளகு, 3ம் நாளில் 3 மிளகு என ஒவ்வொரு நாளுக்கு ஒரு மிளகு என படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்வதாகும். சஷ்டியின் கடைசி நாளில் 7 மிளகு சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்வார்கள். இந்த கடுமையான விரதத்தை இன்றும் பலர் கடைபிடிக்கிறார்கள்.

உடல் ரீதியான பிரச்சனைகள் இருப்பவர்கள், மருந்து எடுத்துக் கொள்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள், பாலூட்டும் தாய்மார்கள் உணவு உண்ணாமல் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. பெரும்பாலானவர்கள் பால், பழம் அல்லது ஒரு வேளை உணவு மட்டும் எடுத்துக் கொண்டு இவ்விரதத்தை கடைபிடிப்பது வழக்கம். உணவு உட்கொண்டு கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மெளன விரதம் இருக்கலாம். அதே போல் விரதம் இருப்பவர்கள் பகலில் உறங்கக் கூடாது.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள், வேலை கிடைக்க வேண்டும், திருமணம் ஆக வேண்டும் என்பவர்கள் சஷ்டி விரதம் இருக்கலாம். வீடு வாங்க வேண்டும், சொத்து பிரச்சனை தீருவதற்கு, நோய் தீர, மற்ற அனைத்து பிரச்சனையில் இருந்து நல்வாழ்வு வாழ கடைபிடிக்கலாம்.
இந்த ஆண்டு கந்தசஷ்டி விரதம் நவம்பர் 02ம் தேதி துவங்கி, நவம்பர் 08ம் தேதி வரை கடைபிடிக்கப்பட உள்ளது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 07ம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 08ம் தேதி, கந்தசஷ்டியின் ஏழாவது நாளில் வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் காலை, மாலை இரு வேளையும் பூஜை செய்து வழிபட வேண்டும். கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், ஷண்முகக் கவசம், குமாரஸ்துவம் போன்றவற்றை படித்து வழிபடுவது சிறப்பு. முருகன் திருக்கல்யாணம் நிறைவடைந்த பிறகே சஷ்டி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
வீட்டில் இருந்து சஷ்டி விரதம் இருப்பவர்கள் ஷட்கோண தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டால் தீராத பிரச்சனைகளும் தீரும். நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழியே இதற்கு சாட்சி.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}