பூஜை முடிந்து.. கோவில் திறந்ததும்.. "ஜெய்ஸ்ரீராம்".. கங்கனா ரனாவத் ஆவேச முழக்கம்!

Jan 22, 2024,04:47 PM IST
அயோத்தி: அயோத்தியில் ராமர் கோவிலில் இன்று பிரான பிரதிஷ்டை முடிந்ததும், நடிகை கங்கனா ரனாவத், உற்சாத்துடனும், ஆவேசத்துடனும், ஜெய் ஸ்ரீராம் என்று தொடர்ந்து விடாமல் முழங்கினார்.

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை இன்று கோலாகலமாக நடந்தேறியது. பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உ.பி. ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புப் பூஜைகள் நடத்தினர்.

இந்த விழாவில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக திரைத்துறையினர் அதிக அளவில் காணப்பட்டனர். சாதாரண நடிகர்கள் முதல் சூப்பர் நடிகர்கள் வரை குவந்திருந்தனர். அனைவரும் உற்சாகத்துடனும், பரவசத்துடனும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் காணப்பட்டனர்.



அதிலும் நடிகை கங்கனா ரொம்பவே உற்சாகத்துடன், அதீத பரவசத்துடன் காணப்பட்டார். ஆரம்பத்திலிருந்தே ராமர் கோவிலுக்காக குரல்  கொடுத்து வந்தவர் கங்கனா ரனாவத். அவரது டிவிட்டர் செயல்பாடுகள் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இந்த விழாவுக்காக நேற்றே அயோத்தி வந்து விட்டார் கங்கனா.

பட்டுச் சேலையில், கழுத்து நிறைய நகைககளைப் போட்டு கொண்டு அனுமன் கோவிலில் அவர் துடைப்பத்தால் கோவிலைப் பெருக்கியது பேசுபொருளானது. இந்த நிலையில் இன்றைய விழாவில் உட்காரக் கூட முடியாமல் உற்சாகத்தில் நின்றபடியும், ஜெய்ஸ்ரீராம், சியா ராம் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அங்கு வந்த விஐபிக்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி பூஜை போட்டு முடித்து, கருவறையில் ராமரின் சிலையின் கண்கள் திறக்கப்பட்டதும், கோவில் மீது ஹெலிகாப்டரிலிருந்து பூக்களைத் தூவினர். இதையெல்லாம் பிரமாண்டத் திரையில் இருந்தடி வெளியில் இருந்தோர் கண்டு களித்தனர். அப்போது கங்கனா மிகவும் உற்சாகப் பெருக்குடன், கைகை மேலே உயர்த்தியபடி அதீத உற்சாகத்துடன் ஜெய் ஸ்ரீராம்  ஜெய் ஸ்ரீராம் என்று விடாமல் முழங்கியபடி காணப்பட்டார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை கங்கனாவும் போட்டுள்ளார். ராமர் வந்து விட்டார் என்று கூறி அந்த வீடியோவை தனது சமூக வலைதளங்களில் கங்கனா போட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்