அயோத்தி : அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு அங்குள்ள அனுமான் கோவிலில் நடிகை கங்கணா ரணாவத் கூட்டி, பெருக்கி சுத்தம் செய்த போட்டோவும், வீடியோவும் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அங்கு நடக்கும் மத சடங்குகள், பூஜைகளில் கடந்த சில நாட்களாக நடிகை கங்கனா ரணாவத் கலந்து கொண்ட வருகிறார்.
இந்நிலையில் ஜனவரி 21ம் தேதியான நேற்று மாலை அயோத்தியில் உள்ள பிரபல ஹனுமான் கர்ஹி கோவிலுக்கு, கண்ணில் சன் கிளாஸ் அணிந்து, தங்கம் மற்றும் சிவப்பு நிறத்திலான பட்டுப் புடவை, தங்க நகைகள் அணிந்து வந்திருந்தார் கங்கனா. திடீரென அங்கிருந்த பெருக்குமாரை எடுத்து தரையை கூட்டி, பெருக்கி சுத்தம் செய்ய துவங்கி விட்டார்.
கலாய்த்த ரசிகர்கள்:
அதோடு தான் கோவிலை சுத்தம் செய்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் கங்கனாவை கலாய்க்க துவங்கி விட்டனர். சன் கிளாஸ் உடன் தான் கோவிலுக்கு வருவார்களா? சன் கிளாஸ், பட்டுப்புடவை கட்டி வந்து கோவிலை சுத்தம் செய்யும் ஒரே நபர் இவர் மட்டும் தான் என நெட்டிசன்கள் கங்கனாவை கேலி செய்து வருகின்றனர். மற்றொருவர், இது சிம்ப்ளிசிட்டி கிடையாது. வெறும் பப்ளிசிட்டி மட்டும் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்ல அயோத்தி ராமர் கோவிலில் சாமியார்கள் சிலருடன் அமர்ந்து யாகத்தில் பங்கேற்கும் போட்டோக்கள் சிலவற்றையும் சோஷியல் மீடியாவில் கங்கனா பகிர்ந்துள்ளார். அயோத்தியில் தான் எங்கு செல்கிறேன், யாரை சந்திக்கிறேன், என்ன செய்கிறேன் என்ற போட்டோக்களையும் கங்கனா தினமும் பகிர்ந்து வருகிறார்.
கங்கனா தற்போது தானே இரண்டாவது முறையாக இயக்கி நடிக்கும் எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி ரோலில் நடிக்க தயாராகி வருகிறார். அதோடு, நடிகர் மாதவனுடன் இணைந்து பெயரிடப்படாத சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி உள்ளார்.
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}