சென்னை: சமீபத்தில் சூர்யா நடிப்பில் மிகப்பிரமாண்டமாக வெளியிடப்பட்ட கங்குவா படத்தின் டீசர் இதுவரை இரண்டு கோடி பார்வைகளைத் தாண்டி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாம்.
ஸ்டுடியோ கிரீன் கே.இ ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி பிரமோத் தயாரிப்பில், கங்குவா படத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நடிகர் சூர்யா நடித்துள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் உள்ளது. அனிமல் படத்தில் நடித்த பாபி தியோலின் வலுவான நடிப்பும் இப்படத்திற்கு மேலும் வலு சேர்த்து உள்ளது.ஒருப்புறம் நடிகர் சூர்யா நடிப்பு பிளஸ் என்றால், மறுபுறம் இப்படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் இசையும் பிளஸ் தான். அப்படி சூர்யாவின் நடிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான அசத்தலான காட்சி அமைப்புகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கங்குவா படத்தின் டீசர் மிகப் பிரம்மாண்டமாக மும்பையில் வெளியிடப்பட்டது. இந்த டீசர் குறுகிய காலகட்டத்தில் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்று 2 கோடி பார்வைகளை பெற்றுள்ளதாம். டீசர் மேக்கிங் மற்றும் விஎஃப் எக்ஸ் வேலைகளுக்காக உலகம் முழுவதிலும் இருந்து அமோகமான பாராட்டுக்கள் பெற்றுள்ளதாம். இதனால் மகிழ்ச்சி அடைந்த தொழில்நுட்ப பண்புகள் குழுவினர் படத்தில் இன்னும் சிறப்பான அவுட்புட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்களாம்.
முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!
26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!
ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!
திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!
செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்
நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!
Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை
திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!
அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?
{{comments.comment}}