எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. சாகாவரம் படைத்த கண்ணதாசன்!

Jun 24, 2025,01:45 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


நிஜத்தில் மரணித்தாலும் மரணம் இல்லா கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றிய தகவல்களை பார்ப்போம்.


கவிஞர் கண்ணதாசன்,  (ஜூன் 24 , 1927,-  17 அக்டோபர் 1981), இவர் புகழ்பெற்ற தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியரும் கவிஞருமாக திகழ்ந்தவர். நாலாயிரத்திற்கும் மேற்பட்ட  கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள் கட்டுரைகள் பல எழுதிய பெருமைக்குரியவர்.


"கண்ணே கலைமானே  கன்னி மயில் என கண்டேன் உனை நானே" என்கிற பாடல் இன்று வரை மட்டுமல்லாது இனிவரும் ஆண்டாண்டு காலத்திற்கும் தாலாட்டு பாடலாக திகழும் இந்த பாடலை கடைசி பாடலாக எழுதிய கண்ணதாசன் பிறந்தநாள் இன்று.


கண்ணதாசன் பிறப்பு:




கண்ணதாசன் தமிழகத்தின் காரைக்குடி அருகே சிறு கூடல் பட்டி என்ற ஊரில் சாத்தப்ப செட்டியார் விசாலாட்சி ஆட்சி ஆகியோருக்கு பிறந்த 10 குழந்தைகளில் எட்டாவது மகனாக பிறந்தார். இவருக்கு முத்தையா என்று பெயர்  வைத்தனர் பெற்றோர். இவர் பின் நாட்களில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பா. கண்ணன் என்ற நாடக ஆசிரியரின் பால் ஈர்க்கப்பட்டு அவருக்கு தாசனாக கண்ணதாசன் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். ஆரம்பகல்வியை சிறுகுடல் பட்டியலும் பின் அமராவதி புதூர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார் .இவருடைய படிப்பு எட்டாம் வகுப்பு வரை தான்.


கண்ணதாசன் தன் மனதில் பட்டதை அப்படியே பேசி விடுபவர். இதனாலேயே அவரை பலருடைய விமர்சனங்களுக்கு ஆளானாலும் அவரது கவிதை தமிழ் அனைவரையும் அவர் பால் கட்டி ஈர்த்து வைத்திருந்தார் .தன் உடன் முரண்பட்டவர்களை நேரடியாக விமர்சித்தாலும் கூட ,அவர்களின் நலனில் அக்கறை கொண்டவராக இருந்தார் .அண்ணாதுரை அவர்கள் புற்றுநோயால் அவதியுற்று மருத்துவமனையில் இருந்த நிலையில் அவரை விசாரிக்கும் வகையில் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நலந்தானா பாடலை எழுதியிருந்தார் .இது போல் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் சூழலுக்கு ஏற்ப திரைப்பட படங்களில் பாட்டு எழுதினார்.


தன்னம்பிக்கை பாடல்களை எழுதுவதில் கண்ணதாசனை அடித்துக் கொள்ள ஆள் இல்லை. அதற்கு உதாரணம் கவிஞர் வாலி சினிமாவில் வாய்ப்பு தேடி கிடைக்காத நாட்களில் மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இருந்த நிலையில் கண்ணதாசனின் "மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடக்குமா" என்ற பாடலை கேட்டு மீண்டும் முயற்சித்து வெற்றி பெற்றதாக வாலி அவர்கள் தன்னுடைய உரையில் கூறியுள்ளார்.


குடும்பம்: இவர் பொன்னம்மாள் ,பார்வதி, வள்ளியம்மை என மூன்று பெண்களை மணந்து கொண்டார் .அவருக்கு 14 குழந்தைகள் இருந்தனர்.


"பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே" என்று வாழ்வியலின் எதார்த்தத்தை தன் வரிகளில் வடித்தவர் கண்ணதாசன் .அவர்கள் இப்படி ஆண்டாண்டு காலத்திற்கும் அழியாத பாடல்களை இயற்றியவர் கண்ணதாசன்.


இப்படி ஒன்றா இரண்டா என்று எண்ணிக் கூற முடியாத அளவு கண்ணதாசன் தன் வாழ்வில் சுமார் 5000 பாடல்களை எழுதி உள்ளார் .ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள சிரிப்பு, சந்தோஷம், அழுகை, துக்கம் ,ஏமாற்றம், உற்சாகம் ,காதல் ,காமம் என அத்தனை தருணங்களுக்குமான அதற்கு தகுந்தார் போல பாடல்களை எழுதிய பெருமைக்குரியவர். அவருடைய கவிதைகள் மிக எளிய முறையில் இருப்பதினால் பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதிய பெருமைக்குரியவர். அவர் தன் புகழ் தன் வாழ்நாள் கடந்தும் நிலைத்து நிற்கும் என்பதில் அவருக்கு எந்த ஐயமும் இல்லை .அதனால் தான் அவரே அதை நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை என்று எழுதி இருந்தார். ஆமாம் கண்ணதாசன் அக்டோபர் 17ஆம் தேதி 1981 ஆம் ஆண்டு இந்த உலகை விட்டு மறைந்திருக்கலாம். ஆனால் அவருடைய கவிதைகள் பாடல்கள் என்றென்றும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.


மேலும் கண்ணதாசன் அவர்களைப் பற்றிய பல தகவல்களை பின்வரும் கட்டுரைகளில் காண்போம். இதற்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி

news

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!

news

மகாலட்சுமி முகம் கொண்ட மங்கலா.. மீண்டும் மங்கலம் (5)

news

குருவிக்கூடு!

news

காற்றின் மொழி!

news

அரபிக் கடல்.. வங்கக் கடல்.. 2 தாழ்வுகள்.. லேட்டஸ்ட் நிலவரம் என்ன.. மழை எப்படி இருக்கும்?

news

இருபுறமும் காய்ந்த நிலை ஊடே மலர்வனம்…சீழ்க்கை கவிதைப் புத்தக விமர்சனம்

news

கந்தன் அருள் இருந்தால் துன்பம்.. வந்த வழி ஓடி விடும்.. கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்!

news

கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்