நாகர்கோவில்: நாகர்கோவிலில் 85 வயது மனைவி சிரமப்படுவதைக் காண சகிக்காமல், அவரை கருணை கொலை செய்த 90 வயது முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே குருந்தன் கோடு ஆசாரிவிளையை சேர்ந்தவர் சந்திர போஸ். இவருக்கு வயது 90. இவரது மனைவி லட்சுமி. இவருக்கு 85 வயதாகிறது. இருவருக்கும் 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். 6 பேருக்கும் திருமணம் ஆகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். முதியவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவர்களை பிள்ளைகள் சரியாக கவனிப்பதில்லை என்று கூறப்படுகிறது.
வயது முதிர்வு காரணமாக சந்திர போஸ்சுக்கும், லட்சுமிக்கும் நோய், உடல் நல பாதிப்பும் இருந்து வந்துள்ளது. இந்த நிலையிலும், சந்திரபோஸ் வேலை செய்து சம்பாதித்து தனது மனைவி லட்சுமியை கவனித்து வந்துள்ளார். சந்திரபோஸிற்கும் வயது முதிர்வு காரணமாக கண் பார்வை போயுள்ளது. இவரால் தனது மனைவி லட்சுமியை பார்க்க முடியவில்லை. 3 மகன்களும் ஷிப்ட் முறையில் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லட்சுமி நோய் முற்றி, படுத்த படுக்கையாக இருந்துள்ளார். படுத்தே இருப்பதாலும், துணி கூட மாற்ற இயலாத நிலையில் இருந்ததாலும் அவரது உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். மனைவியை பராமரிக்க முடியாமல் தவித்துள்ளார் சந்திரபோஸ். இந்நிலையில் நேற்று முன்தினம் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து சந்திரபோஸ் கொலை செய்து விட்டார். கொலை செய்த பின்னர் முதியவர் சந்திரபோஸ் வாசலில் உட்கார்த்து கொண்டு அழுதுள்ளார்.
சாப்பாடு கொண்ட வந்த இளைய மகன், அப்பா அழுது கொண்டிருப்பதைப் பார்த்து குழப்பமடைந்து, வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு அவரது தாயார் லட்சுமி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்து வந்த போலீசார் லட்சுமியை கை பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கண் பார்வையற்று இருந்த முதியவர் சந்திரபோசை போலீசார் கைது செய்தனர். சந்திரபோஸின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை மருத்துவமைனயில் போலீசார் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}