களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில், வேகமாக வந்த கார் ஒன்று இன்னொரு கார் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது இரண்டு கார்களுக்கும் இடையே சிக்கிய பெண் நூலிழையில் உயிர் தப்பிய அதிசயத்தைப் பார்த்து மக்கள் ஸ்தம்பித்துப் போயினர்.
குமரி மாவட்டம் களியக்காவிளை பாறசாலை பகுதியில்தான் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் சாலையோரமாக பழைய பேரீச்சம்பழக் கடை ஒன்று உள்ளது. அந்த கடைக்கு முன்பாக ஒரு கார் நின்றிருந்தது. அந்தக் காருக்குப் பின்னாலிருந்து ஒரு பெண் நைட்டியும், மேலே துப்பட்டாவும் போட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்.

நின்றிருந்த காரை தாண்டி இந்தப் பக்கம் வரும்போது எதிர்பாராதவிதமாக எதிர் புறம் படு வேகமாக ஒரு கார் அவரை நோக்கி மோதுவது போல வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் சுதாரித்து வேகமாக இந்தப் பக்கம் வருவதற்குள் கார் அவரை உரசியபடி பார்க் செய்து நின்றிருந்த கார் மீது மோதி சாலையில் போய் கவிழ்ந்து விழுந்தது.

கார் உரசிய வேகத்தில் அந்தப் பெண்ணின் துப்பட்டா காரோடு போய் விட்டது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணுக்கு ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை. சிறு சேதாரம் கூட இல்லாமல் அப்பெண் உயிர் தப்பினார். கார் விழுந்த வேகத்தில் அந்தப் பக்கமாக டூவீலரில் ஒரு தம்பதி வந்து கொண்டிருந்தனர். நல்ல வேளையாக கார் அவர்களுக்கு முன்பாகவே நின்று விட்டது. இதனால் அவர்களும் உயிர் தப்பினர். கார் டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார்.
இந்த விபத்தால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் கூடி விபத்தை ஏற்படுத்திய காரை நிமிர்த்து சாலையோரமாக கொண்டு சென்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}