சித்தராமையாவுக்கு வருணா.. டி.கே.சிவக்குமாருக்கு கனகபுரா.. கர்நாடக காங். வேட்பாளர் பட்டியல்

Mar 25, 2023,10:52 AM IST
டெல்லி: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியலை கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.

124 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி முதல் கட்டமாக அறிவித்துள்ளது. இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியில் போட்டியிடுவார்.



முன்னாள் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வரா கொரட்டகரே தனி தொகுதியிலும், முன்னாள் அமைச்சர் பிரியங்க் கார்கே சித்தாபூர் தனி தொகுதியிலும் போட்டியிடுவார்கள்.  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன்தான் பிரியங்க் கார்கே.

கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்த முதல் கட்சி காங்கிரஸ்தான். அங்கு இந்த முறை எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. உட்கட்சிப் பூசல்கள் இருந்தாலும் கூட அதை ஒதுக்கி வைத்து விட்டு காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட்டு வருகின்றனர். மறுபக்கம் பாஜகவில் பல்வேறு பிரச்சினைகள் வெடித்தவண்ணம் உள்ளது. கட்சியின் செல்வாக்கும் முன்பு போல இல்லை என்று சொல்கிறார்கள். எதியூரப்பாவின் உதவியையும் பாஜக மேலிடம் நாடியுள்ளது. ஆனால் அவரும் கூட அதிருப்தியுடன் இருப்பதாக சொல்கிறார்கள்.

கர்நாடக சட்டசபைத் தேர்தல் மே மாதத்திற்கு முன்பு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதத்துடன் தற்போதைய சட்டசபையின் ஆயுள் காலம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்