பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைய முக்கியமான மூன்று காரணங்களை வெளியிட்டுள்ளார் முதல்வர் பி.எஸ். பொம்மை.
கர்நாடக சட்டசபைத் தேர்தலை பாஜக மிகப் பெரிதாக எதிர்பார்த்தது. காரணம் இங்கு பெறும் வெற்றி அகில இந்திய அளவில் அக்கட்சிக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்பதோடு, தெற்கில் பாஜக வலுவாக இருக்கிறது என்ற செய்தியை வடக்குக்கு பாஸ் செய்வதும் முக்கியமாக இருந்தது. ஆனால் எல்லாக் கணக்கும் தப்பாகி விட்டது.
காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று விட்டது. இது பாஜகவுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தத் தோல்வி மூலம் தென்னிந்தியாவில் பாஜகவுக்கு இருந்த ஒரே ஒரு ஆட்சியும் பறி போய் விட்டதுதான் அக்கட்சியினரை நிலை குலைய வைத்துள்ளது.
இந்தத் தோல்வி குறித்து பதவி விலகிச் செல்லும் முதல்வர் பி.எஸ். பொம்மை என்டிடிவிக்கு அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். அவரது பேட்டியிலிருந்து:
காங்கிரஸ் சீக்கிரமே பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டது. வழக்கமாக பாஜகதான் விரைவாக இருக்கும். ஆனால் நாங்கள் மிகவும் தாமதம் செய்து விட்டோம். எங்களது முடிவுகளை காலதாதமாக எடுத்ததும் ஒரு காரணம்.
பாஜகவின் செய்திகள் எதுவும் மக்களை சென்றடையவில்லை. இத்தனைக்கும் நாங்கள் அதிக அளவிலான மக்கள் கூட்டங்களை நடத்தினோம். ஆனாலும் மக்களுக்கான செய்தி எதுவும் அவர்களை அடையவில்லை.
வாக்காளர்களைக் கவரும் வகையில் பல்வேறு இலவச அறிவிப்புகளை காங்கிரஸ் வெளியிட்டது. இதுவும் வாக்காளர்கள் காங்கிரஸுக்கு பெருவாரியாக வாக்களிக்க முக்கியக் காரணம். இலவசங்களை மக்கள் பெரிதாக நினைத்து விட்டார்கள்.
பாஜகவின் வாக்கு வங்கி சரியவில்லை. அப்படியேதான் இருக்கிறது. தெற்கு கர்நாடகாவில் வழக்கமாக ஜேடிஎஸ்தான் வலுவாக இருக்கும். அங்கு காங்கிரஸுக்கு இந்த முறை ஆதரவு கிடைத்ததால்தான் அக்கட்சிக்கு பெரிய வெற்றி கிடைத்தது. கிட்டத்தட்ட 5 சதவீத ஜேடிஎஸ் வாக்குகள் காங்கிரஸுக்குத் திரும்பியுள்ளன.
2018 தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 36 சதவீதமாக இருந்தது. அதையே இப்போதும் நாங்கள் பெற்றுள்ளோம். எங்களுக்கு வாக்களித்தோர் குறையவில்லை. ஆனால் ஜேடிஎஸ்ஸின் வாக்கு விகிதம் 18.3 சதவீதத்திலிருந்து 13.3 சவீதமாக குறைந்து விட்டது. அது விட்ட வாக்கு விகிதத்தை காங்கிரஸ் பிடித்துக் கொண்டு, 38.1 சதவீதத்திலிருந்து 42.9 சதவீதமாக அதிகரித்து விட்டது.
தேர்தல் தோல்விக்கு முழுக் காரணத்தையும் நானே ஏற்றுக் கொள்கிறேன். தலைவராக இருப்பவர்தான் தோல்விக்கும் காரணம். அப்போதுதான் சரியான திசையில் நாம் செல்ல முடியும். லோக்சபா தேர்தலுக்கு நாங்கள் சீக்கிரமே தயாராக வேண்டும். அது முக்கியம். பாஜகவின் நிலைமை சரியாக சில மாதங்கள் பிடிக்கலாம். ஆனால் நீண்ட நாட்கள் காத்திருக்கக் கூடாது. கட்சிக்கு புதிய சிந்தனை தேவை, இளைஞர்கள் தேவை, அனைத்து மட்டங்களிலும் இது நடக்க வேண்டும் என்றார் பொம்மை.
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
புஷ்பா 3 நிச்சயம் உண்டு.. துபாயில் வைத்து ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன சுகுமார்!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. தொடங்கியது வாக்குப் பதிவு.. முதல் ஓட்டைப் போட்ட பிரதமர் மோடி
கடலும் கடலின் ஒரு துளியும்!
இளையராஜா போட்ட வழக்கு.. குட் பேட் அக்லி-யை ஓடிடி தளத்திலிருந்து நீக்குமா நெட்பிளிக்ஸ்?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 09, 2025... நல்ல காலம் பிறக்குது
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
{{comments.comment}}