தமிழக பார்டரில் மட்டுமே பரபரப்பு.. பிசுபிசுத்துப் போன பெங்களூரு பந்த்

Sep 26, 2023,04:42 PM IST

பெங்களூரு :காவிரி நீர் பங்கீடு தொடர்பாக இன்று பெங்களூரில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடந்தேறியது. அதேசமயம், எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


காவிரியில் தமிழ்நாட்டுக்கு 5000 கன அடி நீரை திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது .

கர்நாடக அரசு இதனை ஏற்கவில்லை. காவிரி ஆற்றில் இருந்து குறைந்த அளவு நீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விட்டது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கடந்த செப்டம்பர் 23 தமிழர்கள் அதிகம் வாழும் மாண்டியா பகுதியில் பல்வேறு கன்னட அமைப்புகள் போராட்டத்தை நடத்தியது. அதனைத் தொடர்ந்து இன்று தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடக்கூடாது என பெங்களூரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.


மேலும் கர்நாடகாவில் விவசாய சங்கங்கள், தனியார் அமைப்புகள், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், தனியார் கல்வி நிறுவனங்கள் போன்ற பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. 100க்கும் மேற்பட்ட கடைகள் ,வணிக வளாகங்கள் முழுவதும் அடைக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடின. பெங்களூரும் முழுவதும் பாதுகாப்பு பணியில் பலத்த போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.


தமிழக எல்லைப் பகுதி:


முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக தமிழக மற்றும் கர்நாடக மாநில எல்லையில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. தமிழக வாகனங்கள், பேருந்துகள் என அனைத்தும் எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டது. சரக்கு லாரிகள் ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களில்  நிறுத்தப்பட்டன. மாலை 6 மணிக்கு பின் வாகனங்கள் இயக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கர்நாடகா அரசை கண்டித்து காவிரி டெல்டா பகுதியான தஞ்சை செங்கிப்பட்டியில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி டெல்டா பகுதிகளில் குருவை சாகுபடி செய்த நிலையில் 10லட்சம் ஏக்கர் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின.  இந்நிலையில் இன்று தஞ்சை செங்கிப்பட்டியில் சோழன் விரைவு ரயிலை மறித்து காவிரி மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 


அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் கும்பகோணம் மற்றும் தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை  கைது செய்தனர். மேலும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தர வேண்டும் எனவும், கர்நாடக அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்