பெங்களூரு : கர்நாடகா முழுவதும் 7000 க்கும் அதிகமானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் டெங்கு பரவலால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. தற்போது டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7000 ஐ கடந்துள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 4000 க்கும் அதிகமானவர்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாக கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு அதிகரித்து வந்தாலும் கர்நாடகாவில் மிக வேகமாக பரவி வருகிறது.
இது சாதாரணமாக கொசுவால் பரவக் கூடிய நோய் என்பதால் இதற்கு குறிப்பிட்ட அறிகுறிகள் ஏதும் கிடையாது. தட்ப வெப்பநிலை மாறும் போது இந்த நோய் பரவுகிறது. டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் பொதுவாக அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, தும்மல் போன்ற அறிகுறிகள் இருக்கும். டெங்கு பாதித்தவர்களுக்கு வேகமாக ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். இதற்கு இதுவரை குறிப்பிட்ட எந்த சிகிச்சையும் கிடையாது.
அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலால் கர்நாடக மக்கள் அச்சத்தில் உள்ளனர். மக்கள் தங்களின் உடல்நலம், உணவு பழக்கத்தில் அக்கறை காட்ட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
புதுச்சேரியிலும் அதிகரிப்பு
இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் டெங்கு அதிகரித்து வருகிறது. அங்கு 2 பேர் அடுத்தடுத்து டெங்குவால் மரணமடைந்துள்ளனர். டெங்கு பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளுக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தண்ணீர் தேங்காமல் வைத்திருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரப் பணியாளர்கள் கொசு மருந்து அடிப்பதிலும் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}