சென்னை: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சேர்த்து திமுக குழுத் தலைவராக கனிமொழி கருணாநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவைக் குழுத் தலைவராக டி.ஆர்.பாலுவும், மாநிலங்களவை குழுத் தலைவராக திருச்சி சிவாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் தத்தமது குழுத் தலைவர்களை அறிவித்து வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குழுத் தலைவராக நரேந்திர மோடி, அதாவது பிரதமராக நரேந்திர மோடி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு பதவியேற்று விட்டார்.
இந்த நிலையில் மக்களவையில் 5வது பெரிய கட்சியான திமுகவின் நாடாளுமன்றக் குழு நிர்வாகிகளை கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நியமித்து அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி நிர்வாகிகள் விவரம்:
மக்களவை, மாநிலங்களவை இரண்டு அவைகளின் குழுத் தலைவர் - கனிமொழி கருணாநிதி.
மக்களவை திமுக குழு
தலைவர் - டி.ஆர்.பாலு
துணைத் தலைவர் - தயாநிதி மாறன்
கொறடா - ஆ.ராசா
மாநிலங்களவை குழு
தலைவர் - திருச்சி சிவா
துணைத் தலைவர் - மு. சண்முகம்
கொறடா - பி.வில்சன்
இரு அவைகளின் பொருளாளர் - ஜெகத்ரட்சகன்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}