மேடையில் கண்ணீர் விட்ட கார்த்தி.. கட்டிப்பிடித்து தேற்றிய ஜெயம் ரவி.. என்னாச்சு?

Apr 27, 2023,11:48 AM IST
மும்பை : பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரொமோஷன் விழாவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென நடிகர் கார்த்தி கண்ணீர் விட்டார். உடனே ஓடி வந்த ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோர் ஆகியோர் கார்த்தியை கட்டிப்பிடித்து தேற்றிய வீடியோ சோஷியல் மீடியாவில் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

டைரக்டர் மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் 2022 ம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட நிலையில், இரண்டாவது பாகம் ஏப்ரல் 28 ம் தேதி உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் ரிலீசாக உள்ளது. பொன்னியின் செல்வன் முதல்வர் பாகம் ரூ.500 கோடி வசூல் சாதனை படைத்ததால், இரண்டாம் பாகம் இன்னும் அதிகமாகவே ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக இந்த படத்தில் அருள்மொழி வர்மன் அல்லது ராஜ ராஜ சோழன் ரோலில் நடித்த ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலன் ரோலில் நடித்த விக்ரம், வந்தியத் தேவன் ரோலில் நடித்த கார்த்தி, குந்தவை ரோலில் நடித்த த்ரிஷா, பூங்குழலி ரோலில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் டில்லி, ஐதராபாத், கோவை, சென்னை, பெங்களூர் என பல ஊர்களுக்கும் சென்று வருகின்றனர். இவர்களின் தீவிர ப்ரொமோஷன் காரணமாக பொன்னியின் செல்வன் 2 மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.



இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரொமோஷன் விழா நடந்தது. இதில் பொன்னியின் செல்வனில் நந்தினி ரோலில் நடித்த ஐஸ்வர்யா ராய், டைரக்டர் மணிரத்னம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விழாவில் மேடையில் பேசிக் கொண்டிருந்த கார்த்தி, " பொன்னியின் செல்வன் 2 ரிலீசாக போகிறது. ப்ரொமோஷன் வேலைகள் முடிய போகிறது. இந்த டீமுக்கு குட் பை சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது" என கூறிய போது உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார்.

பேச முடியாமல் கண் கலங்கி, தடுமாறிய கார்த்தியை, மேடையில் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த ஜெயம் ரவி ஓடி வந்து கட்டிப்பிடித்து தேற்றினார். ஜெயம் ரவியை தொடர்ந்து விக்ரம், ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் கார்த்தியை தேற்றினார்கள். பொன்னியின் செல்வன் டீமை பிரிய முடியாமல் எமோஷனலாகி கார்த்தி கண் கலங்கிய வீடியோவை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்