பிறந்தது கார்த்திகை மாதம் 2024 : 30 நாட்களும்.. இப்படி வழிபடுங்க... எல்லா நலனும் கிடைக்கும்!

Nov 16, 2024,07:16 PM IST
சென்னை : தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வருவது கார்த்திகை மாதம். ஆன்மிகத்தில் எட்டு என்ற எண்ணுக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. அதே போல் மாதங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் வரும் தீபத்திருவிழாவும், சபரிமலை ஐயப்பன் விரதமும் தான் அனைவருக்கும் நினைவிற்கும் வரும். ஆனால் 30 நாட்களும் அளவில்லாத நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடிய மாதம் தான் இந்த கார்த்திகை மாதம். 

எந்த தெய்வத்தை, எந்த கோரிக்கைக்காக வழிபட்டாலும் அதன் பலன் பல மடங்காக கிடைக்கக் கூடிய ஒரே மாதமும் கார்த்திகை மாதம் தான். 



கார்த்திகை மாத சிறப்புகளும், நலம் தரும் வழிபாடுகளும் :

* ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணிய பலன் கிடைக்கும் என்பார்கள். இதற்கு துலா ஸ்நானம் என்று பெயர். அப்படி ஐப்பசி மாதத்தில் ஒரு நாள் கூட காவிரியில் புனித நீராட முடியாதவர் கார்த்திகை முதல் நாள் ஒரே ஒரு நாள் நீராடினால் கூட ஒரு மாதம் கிடைக்க வேண்டிய புண்ணிய பலனும் ஒரே நாளில் கிடைத்து விடும்.     

* கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமையில் உமா மகேஸ்வர விரதம் இருந்தால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை ஏற்படும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

* கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தில் (திங்கட்கிழமை) சிவ பெருமானுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படும். இதற்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

* கார்த்திகை மாதத்தின் 30 நாட்களும் அதிகாலையில் நீராடி, காலை மற்றும் மாலையில் வீடு அல்லது கோவிலில் விளக்கேற்றினால் பாவங்கள் நீங்கி, மோட்சம் கிடைக்கும்.

* கார்த்திகை மாதத்தில் முருகப் பெருமானுக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

* சிவ லிங்கத்திற்கு நெய்யால் அபிஷேகம் செய்து, பூக்களால் அர்ச்சனை செய்தால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.

* கார்த்திகை மாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் நிரம்பிய வெண்கலம் அல்லது பித்தளை விளக்கை தானமாக அளித்தால் பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.

--


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்