ரூ.14.20 கோடி கார்த்திக் சர்மா.. பொசுக்கென்று ஜோலியை முடித்த ரூ. 30 லட்சம்!

Mar 30, 2026,09:45 PM IST
குவஹாத்தி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர் பிரிஜேஷ் சர்மா ஒரு அதிரடியைக் காட்டினார்.

2026 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் மிகப்பெரிய விலைக்கு வாங்கப்பட்ட இளம் வீரர் கார்த்திக் சர்மாவை அட்டகாசமாக வீழ்த்தி அசத்தி விட்டார் பிரிஜேஷ் சர்மா. இதில் என்ன வேடிக்கை என்றால் ஜஸ்ட் 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர் பிரிஜேஷ் என்பதுதான்.

தனது அறிமுகப் போட்டியிலேயே ரசிகர்களை ஏமாற்றி விட்டார் கார்த்திக் சர்மா. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அவர் 18 ரன்களில் (15 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

டிசம்பரில் நடந்த ஏலத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ரூ. 14.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்த 19 வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. 37 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே தடுமாறிய போது களமிறங்கிய கார்த்திக், ரவி பிஷ்னோய் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் அடித்து நம்பிக்கையளித்தார். ஆனால், பிரிஜேஷ் சர்மா வீசிய பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.



உள்நாட்டுப் போட்டிகளில் (ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே கோப்பை) அதிக சிக்ஸர்களை விளாசி அசத்தியவர்தான் கார்த்திக் சர்மா. இதன் காரணமாகவே, ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட அன்கேப்டு இந்திய வீரர்களில் ஒருவராக இவர் உருவெடுத்தார்.

தற்போது எம்.எஸ்.தோனி காயம் காரணமாக அணியில் இல்லாத நிலையில், கார்த்திக் சர்மா போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே சிஎஸ்கே மீண்டெழ முடியும். வரும் ஏப்ரல் 3-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் கார்த்திக் தனது திறமையை நிரூபிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுபோல காஸ்ட்லியான வீரர்கள் சொதப்புவதும், சாதாரண வீரர்கள் அசத்துவதும் ஐபிஎல்லில் தொடர்ந்து நடப்பதுதான். அந்த வகையில் இன்றைய நிகழ்வும் ரசிகர்களிடையே கலகலப்பை ஏற்படுத்தி விட்டது.

முன்னதாக முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக ஜேமி ஓவர்டன் 36 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 120 கடக்க உதவினார்.

ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய சிஎஸ்கே-வின் முன்னாள் ஜாம்பவான் ரவீந்திர ஜடேஜா, 3 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

என்னது.. பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் காரணமா?.. சசிகாந்த் செந்தில் பதிலடி

news

500 ரூபாய் பென்சனுக்காக 90 வயது மாமியாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்!

news

Monday Motivation: உரைகாரன்.. மெளனம்.. நம்பிக்கை.. முனைவர் தங்கலட்சுமியின் 3 முத்துக் கவிதைகள்!

news

திங்கள் சிந்தனை: எப்படிப்பட்ட ஆசைக்கு இந்த பிரபஞ்சம் உன்னுடன் வரும்?

news

கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்

news

அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!

news

South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை

news

Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!

news

கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்