கருப்பு ... ஒரு விமர்சனப் பார்வை!

May 26, 2026,12:57 PM IST

- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி


தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கருப்பு திரைப்படத்தைப் பற்றி ஒரு பார்வை....


மகளின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வரும் கேரளத்து தந்தையும் மகளும்.... 


நகையை விற்று சிகிச்சை மேற்கொள்ளலாம் என நகையுடன் வர... நகையைத் திருடர்களிடம் பறிகொடுத்துவிட்டு....

திருடு போன நகையை மீட்க அவர்கள் படும் பாடு பார்ப்போர் அனைவரின் கண்களிலும் நீரை வரவழைக்கிறது..


திருடனே திருந்தி திருபபிக் கொடுத்த நகையை, போலீசாரிடம் இருந்தும், நீதிமன்றத்திடம் இருந்தும் பெற முடியாமல் அவர்கள் படும் வேதனைகளையும், நீதிமன்றத்தில் மற்ற வழக்குகளில் நடக்கும் அநியாயங்களையும் தோலுரித்து தொங்க விட்டு இருக்கிறார்  இயக்குநர்....


நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் வேட்டைக் கருப்பு சூர்யாவாக மனித அவதாரம் எடுத்து அந்த வழக்கை ஜெயித்தாரா... மற்ற வழக்குகள் என்னவாயிற்று... கெட்டவர்களை வேட்டைக்கருப்பன் வேட்டையாடினாரா....

என்பது தான் திரைக்கதை...




வில்லன் ஆர் ஜே.பாலாஜி மற்றும் அவரது வில்லன்ஸ் டீம், அட்ராசிட்டி அசர வைக்கிறது....


த்ரிஷா யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்....


லப்பர் பந்து ஸ்வாசிகா பாலாஜியின் அசிஸ்டென்ட் ஆக மிளிருகிறார். கண்மணி கேரக்டர் (ஷிவாதா), மன்சூர் அலிகான், நட்டி சுப்பிரமணியம் என ஒவ்வொருவரும் அவரவர் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார்கள்.


இந்தப் படத்தில் பேய்‌  என்ற பெயரில் ஒரு பாத்திரம்... தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க நினைத்து நீதிமன்றத்திற்கு வந்து.... வேறு வழியில்லாமல் அங்கேயே எடுபிடி வேலை செய்யும் கேரக்டர் ....


மண்ணிலே ஈரம் உண்டு என்ற பாடல் ‌ஒலிக்க... தீபா அக்கா தோன்றும் சீன்..மாஸ்....


சிங்கம் சூர்யா மற்றும் லியோ சாண்டி எக்ஸ்ட்ரா பூஸ்ட்...


கருப்பனாக சூர்யா மிரட்டியிருக்கிறார்...


நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு , விறைப்பான..மொறைப்பான...கண்களில் மிரட்டும் அந்த சூர்யா ரிட்டர்ன்ஸ்..


ஆம்....

கருப்பனாக சூர்யா மிரட்டும் கடைசிப் பாடல் புல்லரிக்க வைக்கிறது....


சாய்‌ அபயங்கர்‌ இசை கருப்பசாமிக்கு கூடுதல் பலம். பின்னணி இசையில் பொளந்து கட்டியிருக்கிறார்...


கருப்பசாமி சண்டைக்காட்சிகள் அனைத்தும் மெய்‌ சிலிர்க்க வைக்கின்றன.


தியேட்டரில் கருப்பன் யாரேனும் ஒருவர் மேல் இறங்கிவிடுவதே... கருப்பு படத்தின் வெற்றி....


படத்தில் காமெடி,சண்டை, பாடல், செண்டிமெண்ட் அனைத்தும் உள்ளது... ஒன்றைத் தவிர...காதல் காட்சிகள்‌ நோ...ஒன்லி கருப்பு... 


மொத்தத்தில்....

கருப்பு சிறப்பு 


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்