சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் பல ஊர்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெளுத்தெடுத்தது.
தமிழ்நாடு முழுவதும் வெயில் வெளுக்கிறது. பல ஊர்களில் 100 டிகிரியைத் தாண்டிப் போய் விட்டது வெயில். குறிப்பாக ஈரோடு, தர்மபுரி, சேலம் நகரங்களில் வெயில் கடுமையாக உள்ளது. மக்கள் பகல் நேரத்தில் வெளியில் வர முடியாத நிலை நிலவுகிறது. வெயில் கடுமையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அனல் காற்றும் வீச ஆரம்பித்துள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 107 டிகிரி வெயில் பதிவானது. ஈரோடு, தர்மபுரி, சேலம் நகரங்கலில் தலா 106 டிகிரி வெயில் வெளுத்தெடுத்தது. திருச்சியில் 105, நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், மதுரையில் 104 டிகிரி வெயில் பதிவானது. திருத்தணியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெயில் வெளுத்தது.. தஞ்சாவூரில் 102 டிகிரி வெயில் பதிவானது.

பாளையங்கோட்டையில் 101 டிகிரி அளவுக்கு இன்று வெயில் பதிவானது. தலைநகர் சென்னையில் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. இருப்பினும் வெப்பம் கடுமையாக இருந்ததால் பகல் நேரங்களில் அனலாக தகித்தது.
தமிழ்நாட்டில் நாளையும் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 8ம் தேதி கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
10ம் தேதி தென் தமிழகத்தில் மழை
அதேசமயம், 10ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக நல்ல செய்தியையும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 11 மற்றும் 12 ஆகிய நாட்களிலும் கூட தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். அதேசமயம், வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}