Karur Stampede: புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார், கரூர் தவெக மா.செ. உள்பட 4 பேர் மீது வழக்கு!

Sep 28, 2025,05:37 PM IST
கரூர்:  கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவாகி வருகிறது.

கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்பட 4 பேர் மீது இதுவரை வழக்குப் பதிவாகியுள்ளது.  கரூர் நகர காவல் நிலையத்தில் இந்த வழக்குகள் பதிவாகியுள்ளன.  இதில் முதல் குற்றம் சாட்டப்பட்டவராக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 2வது பெயராக புஸ்ஸி ஆனந்த், மூன்றாவது பெயராக நிர்மல் குமார் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 4வதாக மற்றவர்கள் என்று சேர்க்கப்பட்டுள்ளது.

என்னென்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு?



BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை.
BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி
BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை
BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது
TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கலாகியுள்ளது. 

இந்த முதல் தகவல் அறிக்கையைத் தொடர்ந்து மேற்கண்டவர்கள் கைது செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் எழுந்துள்ளன. 
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?

news

3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!

news

Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!

news

2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!

news

சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!

news

6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு

news

டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்