லண்டன்: எனக்கு வந்துள்ள புற்றுநோயை குணப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையை எனது பிள்ளைகளுக்குக் கொடுக்க, அவர்களுக்கு இதைப் புரிய வைக்க எனக்கு பெரும் சிரமமாக இருந்தது. இதனால்தான் எனக்கு புற்றுநோய் வந்திருப்பதை வெளியில் சொல்ல இத்தனை தாமதம் ஆனதாக இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் கூறியுள்ளார்.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய் தொற்று இருப்பதாக டாக்டர்கள் உறுதி தெரிவித்துள்ளனர். கேட் மில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்றில் ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆபரேஷனுக்கு முன் புற்று நோய் இல்லை என அறிவித்த மருத்துவர்கள் ஆப்ரேஷனுக்குப் பிறகு புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே கேட் மிடில்டன் வெளியுலகில் காணப்படவில்லை. இதனால் பலரும் சந்தேகம் கிளப்பத் தொடங்கினர்.
இந்த நிலையில்தான் தனக்கு புற்று நோய் வந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார் கேட் மிடில்டன். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த மாதம் லண்டனில் எனக்கு வயிற்றில் மிகபெரிய ஆபரேஷன் செய்யப்பட்டது. அதில் எனக்கு புற்றுநோய் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்காக ஹீமோதெரபி கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி வந்தனர்.

இதன் காரணமாக தற்போது ஆரம்பகட்ட சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. எங்கள் குடும்பத்தின் நலன் கருதியே எனக்கு புற்றுநோய் இருப்பதை வெளியில் கூறாமல் இருந்தேன். இந்த அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து புற்றுநோய்க்கான சிகிச்சையை என்னால் தொடங்க தாமதமானது. மேலும் என் கணவரிடமும், என் குழந்தைகளிடமும் நிலைமையை எடுத்துக் கூறி அவர்களை சமாதானப்படுத்திய பிறகு நான் இந்த சிகிச்சையை தொடர்ந்து எடுத்து கொண்டு வருகிறேன்.
என் பிள்ளைகளுக்கு இதை புரிய வைக்க முடியவில்லை. அவர்களுக்குப் புரியவில்லை. எனக்கு ஒன்றும் ஆகாது, நான் குணமடைவேன் என்று அவர்களை நம்ப வைக்க, நம்பிக்கை தர நான் நிறைய போராட வேண்டியிருந்தது. இதனால்தான் என்னால் இதை உடனடியாக அறிவிக்க முடியவில்லை.
இப்போது நான் நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர கவனம் செலுத்தி வருகிறேன். மனதளவிலும் உடலளவிலும் என்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் கேட் மிடில்டன்.
விரைவில் குணமடையுங்கள் கேட் மிடில்டன்.. உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுத்த நம்பிக்கை நிச்சயம் பலிக்கும்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}