சென்னை: நாளும் நல்லது செய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார் என்று கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் நேற்று இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், உலக மாமேதை கார்ல் மார்க்ஸை பெருமைப்படுத்திட திமுக அரசு விரும்புகிறது. உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற பிரகடனத்தை வடிவைமத்தவர் கார்ல் மார்க்ஸ். வரலாற்றை மாற்றியமைத்த சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் கார்ல் மார்க்ஸ். அவரது நினைவு நாளான மார்ச் 14ம் நாள் தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தோம். இந்தியா ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடையும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம் என எழுதியவர் மார்க்ஸ். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மார்க்ஸின் சிலை நிறுவப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இரண்டாவது அறிவிப்பாக அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் தலைவரும் உறங்கா புலி எனப் போற்றப்பட்டவருமான மூக்கையா தேவருக்கு நாளை 103வது பிறந்த நாள். மதுரை உசிலம்பட்டியில் பிறந்த அவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நம்பிக்கை பெற்று ஃபார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தார். உசிலம்பட்டியில் பலமுறை தேர்தலில் நின்று வெற்றி பெற்று மக்கள் நாயகனாக திகழ்ந்தவர். அவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த இரண்டு செயல்களுக்கும் வரவேற்பு தெரிவித்த கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

தமிழ்நாட்டு அரசுக்கும்
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும்
உலகத்
தொழிலாளர்களின் சார்பிலும்
ஒடுக்கப்பட்ட
கல்வி மறுக்கப்பட்ட
மக்களின் சார்பிலும்
நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
மதங்களைத் தாண்டி
மதம் அல்லாத
ஓர் உழைக்கும் மதத்தை நிறுவிய
மாமேதை கார்ல் மார்க்சுக்கு
உண்டாக்கப்படும் உருவச்சிலை
வேர்வைக்கு எழுப்பப்படும்
வெற்றிச் சின்னமாகும்
பி.கே.மூக்கையாத்தேவருக்கு
எழுப்பப்படும் மணிமண்டபம்
நாங்கள்
குற்றப் பரம்பரையல்ல
கொற்றப் பரம்பரை என்று
குன்றின்மேல் நின்றுகூவும்
பிரமலைக் கள்ளர்களின்
பிரகடனமாகும்
நாளும் நல்லதுசெய்யும்
முதலமைச்சர்
இந்த இரண்டு செயல்களாலும்
இன்னும் இன்னும் உயர்கிறார்
வரவேற்கிறேன்;
வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழகம்: நயினார் நாகேந்திரன்!
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
நட்பே வா!
இப்பூவுலகில் அழகில் சிறந்த பெண்கள் எங்கே ??
தாத்தா பாட்டிகள் தினம்.. கொண்டாடுவோம் இந்தக் குழந்தைகளையும்!
சத்தம் ஏதுமின்றி... மௌனமாய் விழிகளில்!
{{comments.comment}}