கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கா போறீங்க.. அதுக்குன்னே ஆப் வந்தாச்சு மக்களே.. இனி எல்லாமே ஈஸிதான்!

Jan 22, 2025,06:42 PM IST

சென்னை: பயணிகளின் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கென பிரத்யகமான கேசிபிடி ஆப் வெளியிடப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் ரூ.393.74 கோடி செலவில்  கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவிலேயே மிகப் பெரிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து முனையத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 




இங்கு இரு சக்கர வாகன   நிறுத்துமிடம்,கடைகள், உணவகங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தளவு உயரம் கொண்ட பயணச்சீட்டு பெறுமிடங்கள், தொடு உணர் தரைப்பகுதி, மின்கலன் மூலம் இயக்கப்படும் கார்கள், தனி கழிவறைகள், தாய்மார்கள், குழந்தைகளுக்கு பாலூட்டும் அறைகள் என பல்வேறு வசதிகள் உள்ளன.


இதுதவிர விரைவில் ரயில் நிலையம் வரவுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து பஸ் நிலையம் உள்ளே வரைக்கும் செல்ல பாலம் அமைக்கப்படவுள்ளது. இப்படி பல்வேறு வசதிகள் அடுத்தடுத்து வரவுள்ளன. இந்த நிலைியல், தற்போது கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பிரத்தியக செயலி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  கேசிபிடி என்ற மொபைல் ஆப்பை  இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். 


இந்த ஆப் மூலம் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழிகாட்டி வசதியை பெறலாம். சென்னையிலிருந்து பிற மாநிலம் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் நிற்கும் நடைமேடை,புறப்படும் நேரம், பயண நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பெறலாம். அதேபோல் புறநகருக்குள் இயக்கப்படும் மாநகர பேருந்துகளின் எண்கள், வழித்தடங்கள், நிறுத்தங்கள், தொடர்பான விவரங்களை அறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.




குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து அட்டவணைகள், அங்குள்ள வசதிகள், கால்டாக்சி புக்கிங், போன்ற வசதிகளையும் கே சி பி டி ஆப் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


இது மட்டுமல்லாமல் பேருந்துகள் குறித்து புகார்களை தெரிவிக்கலாம். அதே சமயத்தில் அவசர தேவைக்காக உதவி எண்களையும் அணுகலாம் . தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கே சி பி டி செயலியை  ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் மூலம் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

அதிகம் பார்க்கும் செய்திகள்