போதையில் கரகாட்டக்காரன் படப் பாடலுக்கு டான்ஸ் ஆடிய எஸ்ஐ.. சஸ்பெண்ட்!

Apr 07, 2023,11:17 AM IST
இடுக்கி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் நடந்த கோவில் விழாவின்போது மது போதையில் கரகாட்டக்காரன் படப் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இடுக்கி மாவட்டம் பூப்பாறையில் உள்ளது மாரியம்மன் கோவில். இந்தக் கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இந்தத் திருவிழாவுக்கு பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  திருவிழாவின்போது கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற மாரியம்மா மாரியம்மா பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.



அப்போது பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த சாந்தன்பாறை காவல் நிலைய உதவி சப் இன்ஸ்பெக்டர் ஷாஜி என்பவர் மது போதையில் இருந்தார். பாடலைக் கேட்டதும் உற்சாகமடைந்த அவர் சாமி சிலைக்கு முன்பு போய் டான்ஸ்ஆட ஆரம்பித்தார். பாம்பு போல வளைந்து நெளிந்து அவர் ஆட, கூட்டத்தினர் உற்சாகமாக கை தட்டி ரசித்தனர். ஆனால் சப் இன்ஸ்பெக்டரின் உற்சாக நடனம் நிற்காமல் தொடரவே, சிலர் போய் அவரை கைத்தாங்கலாக அழைத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

ஷாஜி டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகவே தற்போது அவரை மாவட்ட எஸ்பி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். பணியின்போது ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காரணத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் ஷாஜி.

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்