முதலீட்டாளர்கள் மாநாடு.. பினராயி விஜயன் அபுதாபி செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு

May 05, 2023,09:42 AM IST

டெல்லி: அபுதாபியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு மத்திய வெளியுறவுத்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அவரது பயணம் ரத்தாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி  மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

முதல்வர் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் வி.பி. ஜாய் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அபுதாபி செல்லவுள்ளது.

அபுதாபியில்  மே 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை 12வது வருடாந்திர முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதில்கலந்து கொள்ளுமாறு கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு அபுதாபி வெளியுறவுத்துறை அமைச்சர் தனி பின் அகமது அல் ஜெயலூதி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதி கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பியிருந்தார் முதல்வர் பினராயி விஜயன். 



இந்த கோரிக்கையைப் பரிசீலித்துப் பார்த்த மத்திய வெளியுறவுத்துறை பினராயியின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. மாநில முதல்வர் நேரில் போய் கலந்து கொள்ளும் அளவுக்கு இது அதி முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு அல்ல. அதிகாரிகள் அளவிலே  கலந்து கொண்டால் போதுமானது  என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பினராயி விஜயனால் அபுதாபி செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக பினராயி விஜயன், அமைச்சர்கள் ராஜீவ், முகம்மது ரியாஸ் ஆகியோர் அடங்கிய குழு நான்கு நாள் பயணத்திற்குத் திட்டமிட்டிருந்தது. அபுதாபி முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதோடு, துபாயில் பொதுமக்கள் சந்திப்புக்கும் பினராயி விஜயன் திட்டமிட்டிருந்தார். ஆனால் மத்திய அரசு அனுமதி அளிக்காததால் இவை ரத்தாகியுள்ளன.

இதற்கிடையே, மத்திய  அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது.  இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சுதாகரன் விடுத்துள்ள அறிக்கையில், கேரள முதல்வரின் அபுதாபி பயணம் தொடர்பாக மர்மம் நிலவுகிறது.  மத்திய அரசு ஏன் அனுமதி தரவில்லை என்பதை  விளக்க வேண்டும்.  அதேபோல கேரள அரசும், இந்த விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன் என்பது குறித்து விளக்கம் தர வேண்டும்.

வழக்கமாக மத்தியஅரசு அடாவடி செய்தால்  வேகமாக பொங்கி எழுவார் முதல்வர் பினராயி விஜயன். ஆனால் தற்போது அவர் அமைதி காக்கிறார். இது ஏன் என்று விளக்க வேண்டும்.  ஒரு வேளை முதல்வரின் பயணம் நியாயமானதாக இருந்து, அதை மத்தியஅரசு மறுத்திருந்தால் அது கேரளமாநிலத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி அவமானமாக கருதப்பட வேண்டும்.  எனவே மத்திய அரசு உரியவிளக்கத்தை அளித்தாக வேண்டும் என்று கூறியுள்ளார் சுதாகரன்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்