திருவனந்தபுரம்: இந்த கல்வியாண்டின் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பாடப்புத்தகங்கள் கொண்டு வர வேண்டாம் என்று கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சமீப காலமாக பள்ளி செல்லும் மாணவர்களின் பெரும் பிரச்சனையாக இருந்து வருவது புத்தக சுமை. இது மாணவர்களுக்கு மட்டும் அல்ல, பள்ளிக்கல்வித்துறையிலும் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. சில மாணவர்கள் அதிகளவில் புத்தகங்களை சுமந்து செல்வதினால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். ஒரு சிலர் புத்தகங்களை சுமந்து செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மாணவர்களின் இந்த பெரும் பிரச்சனைக்கு கேரள அரசு ஒரு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஏற்கனவே மாதத்தின் 4 நாட்கள் பள்ளிக்கு பேக் எடுத்து வர வேண்டாம் என்று தெரிவித்திருந்தது. அத்துடன் வகுப்பு வாரியாக ஸ்கூல் பேக் எவ்வளவு எடையில் இருக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
2025-26ம் கல்வி ஆண்டு விரைவில் தொடங்க உள்ள நிலையில், கேரள அரசு தற்போது அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு மாணவர்களின் மனதை குளிரச் செய்துள்ளது. இது குறித்து கேரளா அரசு வெளியிட்ட அறிவிப்பில், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த பிறகு முதல் இரண்டு வாரங்களுக்கு மாணவர்கள் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் எதுவும் கொண்டு வர தேவை இல்லை. வழக்கமான படங்களுக்கு பதிலாக அந்த முதல் இரண்டு வாரங்கள் சமூகப் பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகுப்புகள் நடைபெறும். போதைப்பழக்கம், ஒழுக்கம், சுற்றுச்சூழல், சட்டம், சமூக வலைதள பக்கங்களை எப்படி பயன்படுத்துவது என்றும், சுகாதாரம் குறித்து வகுப்புகள் எடுக்கப்படும் என்று கேரளா கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் காவல்துறை, சுகாதாரத்துறை, குழந்தைகள் நல பாதுகாப்பு, சமூகநீதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் வகுப்பு எடுக்க உள்ளனர். கேரளாவின் ஜூன் 2 பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 1 முதல் 10ம் வகுப்பு வரை முதல் இரண்டு வாரங்களுக்கு சமூக விழிப்புணர்வு வகுப்பு நடைபெறும் என்றும்,
11, 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 18ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். அவர்களுக்கு ஒரு வாரம் இந்த சமூக விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக கேரள அரசு இந்த முயற்சி எடுத்துள்ளது. இந்த முயற்சிக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!
Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!
திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
{{comments.comment}}